Wednesday, November 30, 2022

 Bhakti Theology Song 1391


1391 Be as you are

 

How you are

Watching this thamasha

As if it is happening

To someone else

 

Why you are

Pretending knowing well that

This is only

Happening to me

 

Do you think that

I never knew this your drama

Doesn’t it happen

Before this

 

What you said that

‘Though having eyes

You refuse to see’

Is applicable only for us

 

Won’t it also

Applicable to you

Because you

Remain as God

 

Ok, do it well

And let me see

How far this

Your drama will go

 

Once the drama ends

And the makeup is removed

Let me see

What you are going to do

 

Acting is

Part of human nature

As acting become

Our regular life

 

When you say that

You also will try

As you too came as a human

Then I can only laugh about it

 

It will be very easy for you

To remain as God

When you remain

As you are

 

Putting a mask

And when you began to act

In order to show a thamasha

By keeping me in front of others

 

We quarrel

Unnecessarily among us

When I point this

Why you become upset with me

 

Ok, let it be

At least you tried once

And you also realized that

You cannot do it anymore

 

Therefore, hear after

Remaining as you are

Come and uphold me

As ever before

 

Gurukulam, 25-06-2022, 6.00 p.m.  

 

Another contention with the Lord not to standby to watch what is going in my life but come and uphold me as before.  Pretending as if He doesn’t know is not possible for Him which is human nature. Though He came as a human, still He cannot behave like an ordinary man as there is no place for that in His nature.

 

1391 இயல்பாய் இரு

 

யாருக்கோ எவர்க்கோ

நடக்குது என்று

என்னமாய் நீயும்

வேடிக்கைப் பார்க்கிறாய்

 

எனக்குதான் நடக்குது

என்பது தெரிந்தும்

எதற்காக நீயும்

வீணாய் நடிக்கிறாய்

 

உன்னிந்த நாடகம்

அறியாத ஒன்றா

இதற்கு முன்பாக

நடத்தாத ஒன்றா

 

கண்கள் இருந்தும்

காணாது இருக்கிறீர்

சொன்னது எமக்கு

மட்டுமேப் பொருந்துமா

 

கடவுளாய் நீயும்

இருப்பதினாலே

உனக்கு அதுவும்

பொருந்தாது போகுமா

 

நடத்திடு எதுவரைப்

போயிடும் பார்க்கிறேன்

உனது நடிப்பையும்

வேடிக்கைப் பார்க்கிறேன்

 

நாடகம் முடிந்தபின்

வேடமும் களைந்தபின்

என்னநீ செய்வாய்

அதை எதிர்பாக்கிறேன்

 

நடிப்பு என்பது

மனிதற்கு  உரியது

நடிப்பே எமது

வாழ்வாக்கிப் போனது

 

மனிதனாய் வந்ததால்

முயன்றுமே பார்க்கிறேன்

என்றுநீ நடித்திட

சிரிப்புதான் வருகுது

 

இயல்பாய் நீயும்

இருந்திடும் போது

இறைவனாய் இருப்பது

எளிதாக இருக்குது

 

எனக்காக நீயும்

வேடமும் போட்டு

என்னை வைத்து

வேடிக்கைக் காட்ட

 

இருவர்க்கும் இடையே

சண்டைதான் வருகுது

அதையே சொன்னால்

ககோபம்ஏன் பெருகுது

 

சரிவிடு போகட்டும்

முயன்றுமே பார்த்தாய்

சரிப்பட்டு வராது

என்பதை உணர்ந்தாய்

 

எனவே இனிமேலே

இயல்பாக இருந்து

வழக்கம்போல் வந்து

என்னையும் தாங்கு

 

குருகுலம், 25-06-2022, மாலை 6.00


No comments: