Bhakti Theology Song 1350
1350 I rejoice
Who knows this play
Of your divine love
Who can understand
The joy in my heart
Are you giving your love
Very little to me
I completely drenched
In the rain of bliss
Though all the
Outside activities
Often attack me
From different sides
The love that
You have for me
Will protect me
Like an anchor
The boat
Which is near the shore
Will be tossed
By the waves
Unless one
Navigates it properly
It might get
Crashed on the shore
When the boat
Goes in the deep sea
And how much deep
The water might be
Not tossed
Much by the waves
The voyage
Will remain smooth one
Whichever might be
The voyage
As long as you are there
To take control of the boat
Voyage will remain
Pleasant one
And it will reach
The shore safely
As you are there
To give company all through the journey
And as the
Control of the boat is in your hand
I know nothing
But only to rejoice
And I know
Your divine love
Gurukulam, 19-03-2022,10.30 p.m.
As the Lord is there to navigate the
boat, in spite of all the troubles and turmoils that disturb the voyage, still
I rejoice within me as He will take me safely to the destiny.
1350 களிக்கிறேன்
யாரறிவார் இந்த
அன்பின் விளையாட்டை
எவர்புரிவார் எந்தன்
மனக் கொண்டாட்டத்தை
கொஞ்சமா தருகின்றாய்
உனது அன்பை
முழுதாய் நனைகிறேன்
பேரின்ப மழையில்
புறம்பே நடக்கும்
செயல்கள் பலவும்
பலவிதம் என்னைத்
தாக்கிய போதும்
உள்ளாக என்னிடம்
நீகொண்ட அன்பு
நங்கூரம் போலவே
என்னையும் காக்கும்
கரையில் மோதும்
அலையின் மீது
செல்லும் படகு
பலவிதம் ஆடும்
கவனமாய் அதனை
வளிக்க மறந்தால்
கரையில் மோதி
உடைந்து போகும்
ஆழ்ந்த கடலில்
செல்லும் போது
ஆழம் எத்தனை
இருந்த போதும்
ஆட்டம் குறைந்து
நிலைத்து நிற்க
வாட்டம் இன்றிப்
பயணம் போகும்
பயணம் எதுவாய்
இருந்த போதும்
துடுப்புப் போட
நீயும் இருக்க
பயணம் போகும்
இனிமையாக
கரையும் சேரும்
கவனமாக
பயணம் முழுதும்
துணையாய் இருக்க
துடுப்பு உந்தன்
பொறுப்பில் இருக்க
களிப்பதன்றி
வேறு அறியேன்
உனது அன்பை
நானும் அறிவேன்
குருகுலம்,
19-03-2022, இரவு, 10.30
No comments:
Post a Comment