Bhakti Theology Song 1390
1390 You will concede
Whatever you do
Surely there will be
Some reason
Behind it
It is not possible
For me to understand
Therefore, it is
Better for me to keep quiet
Whatever might be
The reason behind it
Finally, your
Work will be accomplished
Realizing that
If I keep quiet
Surely there will be
Plenty of blessings in my life
There is no use
In confronting you
And asking
Questions about it
Even if you share the reason
Well in advance
I am not going
To believe it
Though the childe
Becoming adamant
And began to behave
Very rudely
Like a mother
Who will bring it
Under her control
By various punishments
You will also
Do the same
Knowing that well
I keep quiet
Only keeping
My interest alone
You will do
Everything well
Not receiving it at the end
After receiving punishment
By becoming
Very adamant
I will receive it
In a simple way
By pretending
As if I am good boy
You understanding
That well
With a
Mischievous smile
Will come
On your own to my ways
And you provide
Whatever I ask
When my things
Are going to be accomplished
What is the need
For me to know about your reason
Keeping that
For yourself
First accomplish
My needs
Gurukulam, 23-06-2022, 11.00, p.m.
At the end God is going to accomplish what is best for me and
also several times conceding to my desires. So why should I confront Him or
contend with Him? Whatever might be His will, that is His problem and not my
concern. What all I need is that He should accomplish my needs according
to His which is acceptable to both of us.
1390 வழிக்கு வருவாய்
காரியம் எதையும்
நீயுமே செய்தால்
காரணம் அதன்பின்
நிச்சயம் இருக்கும்
அதனைப் புரிவது
எனக்கியலாது
ஆகவே அமைதி
காப்பதே நல்லது
காரணம் எதுவாய்
இருந்த போதும்
உன்காரியம் மட்டும்
நிச்சயம் நடக்கும்
அதனை உணர்ந்து
அமைதி காக்க
நன்மைகள் வாழ்வில்
நிச்சயம் பெருகும்
எதிர்த்து நின்று
கேள்விகள் கேட்டு
வாதம் செய்வதில்
பயனுமே இல்லை
முன்பே காரணம்
நீயுமே சொன்னால்
நிச்சயம் நம்பப்
போவதும் இல்லை
அழுது கொண்டு
அடம் பிடித்து
குழந்தை என்ன
செய்த போதும்
அதட்டி உருட்டி
மிரட்டி அடித்து
பணிய வைக்கும்
தாயைப் போல
நீயும் செய்வாய்
நானும் அறிவேன்
அதனைப் புரிந்து
அமைதி காத்தேன்
என் நன்மை
மட்டும் எண்ணி
எதையுமே நீ
நன்கு செய்வாய்
அழுது புரண்டு
அடியும் வாங்கி
அதன்பின் அதனை
நானும் பெறாமல்
நல்ல பிள்ளை
போல நடித்து
நானும்பெறுவேன்
எளிய வழியில்
அதனை நீயும்
புரிந்து கொண்டு
நமட்டு சிரிப்பு
சிரித்துக் கொண்டு
வலிய எனது
வழிக்கு வருவாய்
கேட்கும் எதையும்
உடனே செய்வாய்
என் காரியமும்
நடக்கும் போது
உன் காரணமும்
எதற்கு எனக்கு
அதனை நீயே
வைத்துக் கொண்டு
என் காரியத்தை
முடித்து காட்டு
குருகுலம், 23-06-2022, இரவு 11.00
No comments:
Post a Comment