Bhakti Theology Song 1377
1377 My limitation
You again
Give back
All those unnecessary things
Which I already give up
But you
Refused to give
What I seek
As I like
I cannot understand
This your act
When I sought explanation
You refused to give
All that remain
As burden for me
Could be
Very light to you
You also could
Understand the pain
That I under go
When I carry them
You also could
Promise me that
You will come and
Give your shoulder to carry
You will come
And definitely help
As you have
Promised me
But is it
Correct on your part
To impose that
I never liked
You might give
Thousands of reason for that
But will my heart
Accept them, you tell
When I have a limitation
For anything
Why not you also
Have your own
Though you have
Unlimited authority
Why you deny
My limitation
Even after came as a human
If you refused to understand
Who else can
Tell this to you
Therefore understand
My point when I say
I don’t need
Them any more
Even if you
Refused to give what I like
Don’t impose
That I don’t like
You should act
Going beyond
Your personal
Likes and dislikes
Gurukulam, 22-04-2002, 11.00
Today I had to go to Thally to
the EB office to enquire about the excess bill.
Similarly, in the last few days I had to stand with Sankar to dig a soak pit as
water in the bath rooms is not going out. I have to not only maintain the Trust
account but each year have to prepare the balance sheet for auditing [keeping
bills for various purchases the whole year, making vouchers, getting address
from the donnees to make receipts etc.
etc.] These are the things that I never liked in my life. These are
not the work for a sannyasi. But never in my life God
sanctioned what I liked but always pushed what I didn’t like. What
else can I do except vent out my anger to Him.
1377 எனது எல்லை
வேண்டாம் என்று
விட்ட அனைத்தையும்
வேண்டும் என்றே
மீண்டும் தருகிறாய்
வேண்டும் என்றே
கேட்பவை தன்னை
வேண்டாம் என்றே
நீயும் மறுக்கிறாய்
உன்னிந்த காரியம்
புரியவே இல்லை
விளக்கம் கேட்டால்
தருவதும் இல்லை
எனக்கு பாரமாய்
இருப்பவை எல்லாம்
உனக்கு இலகுவாய்
இருந்திடக் கூடும்
சுமக்கின்ற போது
வந்திடும் வலியை
நீயும் கூட
புரிந்திடக் கூடும்
கூடவே வந்து
தோளினைத் தந்து
உதவுவேன் என்று
சொல்லிட முடியும்
சொன்ன படியே
சுமக்கின்றே போது
வந்து நீயும்
உதவுவாய் நிச்சயம்
ஆயினும் உள்ளம்
ஏற்கா ஒன்றை
வலியத் திணிப்பது
நியாயமா கூறு
ஆயிரம் காரணம்
அதற்குத் தந்தாலும்
என்மனம் அதனை
ஏற்குமா சொல்லு
எனக்கொரு எல்லை
உள்ளது போல
உனக்கேன் இல்லை
அதைமட்டும் கூறு
எல்லை இல்லா
அதிகாரம்
இருந்தாலும்
எனக்குள்ள எல்லையை
மறுப்பதேன் கூறு
மனிதனாய் வந்தும்
புரிந்திட மறுத்தால்
எடுத்துச் சொல்ல
இயலாது பாரு
ஆகவே வேண்டாம்
என்றும் சொன்னால்
அதிலுள்ள நியாயம்
தன்னை உணரு
வேண்டிய ஒன்றை
தர மறுத்தாலும்
வேண்டா ஒன்றை
திணிப்பதை நிறுத்தி
விருப்பு வெறுப்பு
கடந்து நின்று
செயல்பட வேண்டும்
என்பதை உணரு
குருகுலம், 22-04-2002, இரவு, 11.00
No comments:
Post a Comment