Bhakti Theology Song 1367
1367 Unnecessary Play
Why you are
Fighting with me
Why you are
Making me to cry
‘This is my play’
Though you say like this
I don’t have
Any more strength for that
A mother will
Make a child to cry
Then hugging it next minutes
Is the heart of a mother
After that
As the baby become upset
It will kick the mother
My much whining
Can I do it?
Like that
Can I kick you?
Who made me cry?
If you made me to cry
Only longing for that alone
You should take me to pamper
As I am kicking you
But I don’t have
Time for that now
If someone else is available
You go and play with him
Now I become
An old donkey
I don’t have any more strength
I clearly told this
As you give up your life
When you were around 32 years old
You never knew
About it
There is no point of
Discussing about it now
But I am not
Going to leave you easily
If you don’t know
How to kill your time
There are thousands of
Ways for that
Leave that now and
What kind of play is this?
Therefore listening
What I say
You also should
Do to me
You should stop
Making me to cry
Taking and hugging me
And comforting me
You should
Behave like a mother
Gurukulam, 13-4-2022, 11.00
Unless one has observed the special and close relationship with
a child and mother they cannot understand the spirit of this song also.
Sometimes a mother will wantonly make her child cry just for the sake of fun.
After that when the baby began to cry she would immediately hug it and begin to
pamper it. After that the baby becomes upset with its mother and will begin to kick
its mother by crying [whining?] further and continue to kick her further. This
kind of intimate play is quite common in the relationship between a mother and
baby. Night when I was crying for demanding certain answers from the Lord, then
I became very upset with Him as He continued to do these kinds of plays with
me. So stopping crying I wrote this song expressing that close relationship
between me and the Lord.
1367 வேண்டாத விளையாட்டு
எதற்காக என்னோடு
போராடுராய் நீயும்
ஏன்என்னை அழவிட்டு
பார்க்கிறாய் நாளும்
‘இதுஎன் விளையாட்டு’
என்று நீ சொன்னாலும்
அதற்கானத் தெம்பு
இல்லை என்னிடம்
குழந்தையை அழவிட்டு
வேடிக்கை பார்த்து
அடுத்த நொடியிலே
அணைப்பது தாயுளம்
அதன்பின் ஆத்திரம்
கொண்ட குழந்தையும்
அன்னையை எட்டி
உதைத்துச் சிணுங்கிடும்
அதுபோல நானும்
செய்திடக் கூடுமோ
அழவிட்ட உன்னையே
உதைத்திட இயலுமோ
அதற்காக ஏங்கி
நீஎன்னை அழவிட்டால்
உதைக்கும் நீஎன்னை
தூக்கியே கொஞ்சணும்
அதற்கெல்லாம் நேரம்
இல்லை என்னிடம்
அகப்பட்டால்
யாரேனும்
விளையாடு அவரிடம்
ஏழெட்டு கழுதை
வயசாகிப் போச்சு
இனிமேலும்
தெம்பில்லை
நான் சொல்லியாச்சு
நாலெட்டு வயதிலே
உயிரையே விட்டதால்
இதுபற்றி உனக்குத்
தெரியாமல் போச்சு
அதுபற்றி இப்போது
பேசிப் பயனில்லை
அதற்காக உன்னையும்
விடுவதாய் இல்லை
நேரம் உனக்கு
போகலை என்றால்
மாற்று அதற்கு
ஆயிரம் உண்டு
அதைவிட்டு இதுவென்ன
வீண் விளயாட்டு
ஆகவே நானும்
சொல்வதைக் கேட்டு
அதன்படி நீயும்
செய்திட வேண்டும்
அழவிடும் விளையாட்டை
நிறுத்திட்ட
வேண்டும்
தூக்கி எடுத்து
ஆறுதல் படுத்தி
அன்னையை போல
நடத்திட்ட வேண்டும்
குருகுலம், 13-4-2022, இரவு, 11.00
No comments:
Post a Comment