Bhakti Theology Song 1352
1352 I will overcome in you
I have fallen
Not knowing that I fell
I live not knowing that
I am living
But I know one thing
That is coming unto you
That is what
I am doing now
By body is
Completely broken
The deceiving heart also
Become frozen
The atman also
Become depressed
The senses also
Become stagnant slowly
The body that made of dust
Torturing on one side
And people are
Pressing me standing around
I live like a
Dead person
I came unto you
To protect me
You should give
Long endurance
You should give
Courage in my heart
There is no history of
Defeat in my life
There is no place
For defeat in you
Though I am in hurry
And do things in haste
But there is no
Place for them in you
However I act
With much haste
There is no use in
Going beyond your will
I will stand up
With the same speed as I fell
I will complete my race
By living in you
Whatever the trials and troubles
Might come
Removing the depression
I will overcome in you
Gurukulam, 30-3-2022,
4.00, a.m.
Bhakti never accepts defeat. Though there will be
many lost wars, still the final victory will be only ours as we are already
conquerors in Him. As advancing in age the body refuses to cooperate. Though others
understand still they expect more than what we do. Several times our own mind
[heart] won’t cooperate with us. But bhakti never accepts defeat.
.
1352 உன்னில் வெல்வேன்
வீழ்வது தெரியாமல்
வீழ்ந்துமே
கிடக்கிறேன்
வாழ்வது புரியாமல்
வாழ்ந்துமே
இருக்கிறேன்
ஆயினும் உன்னிடம்
வந்திட அறிவேன்
அதைத்தான் இப்போது
நானுமே செய்கிறேன்
உடைந்து போனது
என்னிந்த உடலும்
உறைந்து போனது
பாழும் என்மனதும்
தளர்ந்து போனது
ஆவியும் உள்ளாக
தேக்கம் அடைந்தது
உணர்வும் மெதுவாக
மண்ணான உடலும்
ஒருபுறம் வதைக்க
மானுடர் சூழ்ந்து
பலவிதம் நெருக்க
நடை பிணமாக
நாளுமே வாழ்கிறேன்
நாடியே வந்தேன்
என்னைநீ காக்க
நீடித்த பொறுமை
நீதர வேண்டும்
நெஞ்சில் உறுதி
நல்கிட வேண்டும்
தோற்ற சரித்திரம்
என்னிடம் இல்லை
தோல்விக்கு உன்னிடம்
வழியுமே இல்லை
ஆத்திரம் அவசரம்
எனக்கிருந்தாலும்
அவற்றுக்கு உன்னிடம்
இடமுமே இல்லை
எத்தனை வேகமாய்ச்
செயல் புரிந்தாலும்
உன்சித்தத்தை மீறிப்
பயனுமே இல்லை
வீழ்ந்த வேகத்தில்
எழுந்துமே நிற்பேன்
உன்னில் வாழ்ந்து
ஓட்டத்தை முடிப்பேன்
சோதனை வேதனை
எது வந்தாலும்
சோர்வினை நீக்கி
உன்னிலே வெல்வேன்
குருகுலம், 30-3-2022, காலை, 4.00
No comments:
Post a Comment