Bhakti Theology Song 1348
1348 You
gave the answer
As you came seeking voluntarily
I received clarity
As you voluntarily bestowed
I received grace
I asked questions
To so many people
To those who cannot
Understand my situation
Standing in there
Own situation
They gave
Several answers to me
Unable to take
Any kind of decision
I am confused
Because of their responses
Leaving them
I asked question to myself
And I tried to give answer
As much as I know
But unable to find answer
To other questions
That came after that
I remain bewildered
Finally I
Came unto
Your presence
As before
Not seeking
Any kind of explanation from me
You provided
Your answer
‘If you came
Before this
This much confusion
Wouldn’t have come’
Not blaming
Me like this
You gave
Apt answer to me
Though I have
Repeated the same
mistakes several times
Foolishly
What to say
About your love
Which keeps an eye upon me
To which one I could compare it
As you redeemed me
Seeking voluntarily
You show your love also
Coming on your own
Though I have
Experienced this several times
I live
Not understanding this clearly
But understanding
My foolishness
You come again seeking me
To redeem me again
Gurukulam, 18-3-2022, 4.00 a.m.
When I seek answers to certain [current issues and problems] to
others and also within me God, remaining patience refuses to interfere. When
nothing works, then She comes and gives the apt answer to my questions and
needs. Though I experienced it several times in life, forgetting it I repeat
the same mistake again. Of course God won’t come and give answers directly. She
will use only others to give answers to us. However
when that particular answer is not working, then God knows how to give the
answer by other means and She always does this.
1348 தந்தாய் விடை
தெளிவு பிறந்தது
தேடிநீ வந்ததால்
கிருபை கிடைத்தது
நாடிநீ தந்ததால்
நானுமே கேள்வி
பலரிடம் கேட்டேன்
என்னிலை புரியாத
மனிதர் அவரிடம்
தன்னிலை நின்று
அவருமே தந்தார்
பலவித பதிலை
பலவிதம் எனக்கு
ஒருவித முடிவும்
எடுக்க இயலாது
குழம்பியே போனேன்
அவரது பதிலால்
அவரை விடுத்து
எனக்கு நானே
தந்தேன் பதிலை
தெரிந்த வரையில்
ஆயினும் அதனால்
தோன்றிய கேள்விக்கு
விடை அறியாது
திகைத்துமே போனேன்
வழக்கம் போல
இறுதியாக நான்
வந்து நின்றேன்
உன்னிடம் மீண்டும்
எவ்வித விளக்கமும்
என்னிடம் கேட்காது
நீயுமே தந்தாய்
உனது விடையை
முன்னதாக நீ
என்னிடம்வந்தால்
இத்தனை குழப்பங்கள்
வந்துமே இருக்காது
என்று குறைநீ
கூற மறுத்து
ஏற்ற பதிலைத்
தந்தாய் எனக்கு
எத்தனை முறையோ
இதனையே செய்தும்
புத்தி வராத
பேதை என்மேல்
கண்களை வைத்துக்
காக்கும் உனது
அன்புக்கு ஈடாய்
எதனைச் சொல்ல
நாடியே வந்து
மீட்டது போல
தேடியே வந்து
அன்பு காட்டுறாய்
அதனைப் பலமுறை
உணர்ந்த போதும்
புரிய மறுத்து
வாழுறேன் நானும்
ஆயினும் எனது
பேதமை புரிந்து
தேடியே வருகிறாய்
மீட்டிட மீண்டும்
குருகுலம்,
18-3-2022, காலை 4.00
No comments:
Post a Comment