1349 I don’t seek any other things
When you have occupied all my thoughts
Where is the need for me to think you separately
Once you have mingled with my life and atman
Where there is a separate life for me
When I stand, walk and sit
Doing all of them only for you
When I talk to you amidst these activities
I don’t have any separate activity for me
I have never done any act for others separately
Other than what you have asked me to do [for them]
Therefore I have never done the act of
Taking time to sit and pray to you
Therefore, I never sought
Separate time to talk to you
I have never done a separate act
In the name of prayer
Sitting alone I will think only you
Amidst all my activities I will communicate with you
Not doing anything and remaining silently
I will mingle with you not knowing any separation
As everyday life remains like this
As I rejoice in it with you
I never seek any separate life other than this
I will never seek anything other than you
Gurukulam, 19-3-2022, 5.00 p.m.
For me prayer is simple communication with the Lord—uttered or
unuttered. A deep sigh, a gentle smile and the falling of a drop of tears
are prayers for me. Though I believe in taking time to pray to God still I
never limit prayer with that activity. Even writing a poem is a prayer for me.
As I got again such an opportunity pouring down my heart I wrote this song as
my prayer to the Lord.
1349 வேறேதும்
வேண்டேன்
நினைவெல்லாம் நீயாக
இருந்திடும் போது
தனியாக நினைக்கத்
தேவையும் ஏது
உயிரில் உணர்வில்நீ
கலந்த பின்னே
தனியொரு வாழ்விற்கு
இடமுமே ஏது
நின்று நடந்து
கிடக்கும் போதும்
அவற்றை எல்லாம்
உனக்காய்ச் செய்து
அதனிடை உன்னுடன்
பேசுற எனக்குத்
தனியொரு செயல் இனிக்
கிடையாது
பிறர்க்கென எதையும்
செய்ததும் கிடையாது
செய்திடச் சொல்லிநீ
சொன்னதை யன்றி
ஆகவே உன்னுடன் பேசிட
வென்று
வேறொரு செயலைச்
செய்ததும் கிடையாது
ஆகவே உன்னுடன் பேசிட
வென்று
தனியொரு நேரம் தேடுவ
தில்லை
வேண்டுதல் என்ற பெயரிலே
தனியொரு
செயலை நானும்
செய்ததும் இல்லை
தனியே அமர்ந்து
உன்னையே நினைப்பேன்
செயல்கள் இடையே
உன்னுடன் பேசுவேன்
ஏதுமே செய்யாது
மவுனமாய் இருந்து
உன்னுடன் இரண்டற
நானுமே கலப்பேன்
அனுதின வாழ்வு
இதுபோல் இருக்க
அதிலே உன்னுடன்
மகிழ்ந்துமே இருக்க
இவையன்றி வேறொரு
வாழ்வும் வேண்டேன்
உன்னை யன்றி எதையும் நானுமே நாடேன்.
குருகுலம்,
19-3-2022, மாலை 5.00
No comments:
Post a Comment