Bhakti Theology Song 1384
1384 I touch because of
my right
I saw your mischievous smile
And I fall in love with you
You came unto me smiling gently
And tried to touch me
I told you to stand away from me
And asked: is it correct on your part to touch me
I am innocent girl
Who does not know guile and mischief
Immediately you began to laugh
And told that this is nothing but drama
And asked me: who is the first to come
And tried to hug me
‘I came as you called me
And gave me for you to hug
Because of that right I touched you
Then I forgot all that happened
I remained as an innocent girl
And you came to overlord me
You know what happened then
Better tell me the reason for that
Once I born only for you
You told me not to remain alone
And you touched me to make me as your own
As I you have that right
Still as shyness prevented me
And as fear added to it
Though I requested to stand away from me
Still, I was burning within due to passion
But Oh my Lord I forgot myself
In that your smile
Coming on my own and giving me voluntarily
I became your slave
Gurukulam, 10-5-2022, 11.30 p.m.
The way both lover and ladylove tease each other is part of viraha-bhakti. But
I gave a twist in it by saying that I came unto Him as already belong to Him.
1384 உரிமையால் தொட்டேன்
கள்ளச் சிரிப்பினைக்
கண்டேன்
காதலும் உன்மீது
கொண்டேன்
மெள்ள நகைத்துமே
வந்தாய்
மேனியைத் தீண்டிட
முயன்றாய்
தள்ளியே நின்றிடு
என்றேன்
தகுமோ ஈதுமே என்றேன்
கள்ளம் கபடம்
ஒன்றும் அறியா
காரிகை நானுமே
என்றேன்
அந்தக் கணமே
சிரித்தாய்
அடடா நாடகம் என்றாய்
கட்டிப்பிடித்து
தொட்டு அணைத்தது
நானா நீயா என்றாய்
அழைத்ததால் நானுமே
வந்தேன்
நீ அணைத்திட்ட
என்னையேத் தந்தேன்
அந்த உரிமையால்
தொட்டேன்
அதன்பின் நடந்ததை
மறந்தேன்
அறியாத பேதையாய்
இருந்தேன்
ஆட்கொள்ள அருகினில்
வந்தாய்
அதன்பின் நடந்ததை
அறிவாய்
அதற்கான காரணம்
சொல்வாய்
உனக்காகப் பிறந்த
பின்னால்
தனியாக இருக்காதே
என்றாய்
உனதை உனதாக்கிக்
கொள்ள
உரிமையால் நீயுமே
தொட்டாய்
ஆயினும் நாணமும்
தடுக்க
அச்சமும் சேர்ந்துமே
கொள்ள
தள்ளி நின்றிடச்
சொன்னபோதிலும்
தாபத்தால் நானுமே
தவித்தேன்
ஆயினும் அந்தச்
சிரிப்பில்
ஐயனே என்னையே
மறந்தேன்
நானாக வந்து
என்னையேத் தந்து
நான்உன் அடிமையாய்
ஆனேன்
குருகுலம்,
10-5-2022, இரவு 11.30
No comments:
Post a Comment