Bhakti Theology Song 1369
1369 unsatisfied
heart
I never expect
Too much from you
I never asked
More than what is my need
If you give each day
According to the need
That will give
Peace of mind to me
Only food and dress
And a place to dwell
Alone won’t remain
As the need for one
When there is
A heart within us
None can deny
Its needs also
But I don’t
Have the capacity
To know its
Needs
Its need
Never remains
Like that of
The body
Knowing that
Coming on your own
Unless you bestow
There is no other means
The heart that
Does not satisfied in anything
Gives lots of trouble
For which there is no end
There is no use
In doing anything
Like quenching the fire
By pouring more ghee on it
I don’t have
The capacity to quench it
By pouring water
On it
Therefore knowing
My condition
Coming on your own
And quenching the fire
You should protect me
All through the life
And you should take me
To the Further Shore
Gurukulam, 14-4-2021, 11.45 p.m.
Unless God quenches the thirst of the heart, none of our efforts will
satisfy it.
1369 நிறைவு காணா மனது
அதிகம் ஒன்றும்
எதிர்பார்க்க வில்லை
அளவுக்கு மிஞ்சி
கேட்கவும் இல்லை
அன்றாடம் அளந்து
தந்தாலே போதும்
அதுவே நிம்மதி
தந்திடும் எனக்கும்
உடையுடன் உணவு
உறைவிடம் மட்டும்
அன்றாடத் தேவையாய்
இருப்பது இல்லை
மனமொன்ற ஒன்று
இருந்திடும் போது
அதற்கானத் தேவையும்
மறுப்பதற் கில்லை
ஆயினும் அதற்குள்ள
தேவை எதுவென
அறிந்திடும் திறனோ
எனக்குமே இல்லை
உடல்தேவை போன்று
அதன்தேவை என்றும்
அளவாக மட்டும்
இருப்பதே இல்லை
அதனை அறிந்த
நீயாக வந்து
தருவது அன்றி
வழிவேறு இல்லை
ஒன்றிலும் நிறைவு
காணா மனது
தந்திடும்
தொல்லைக்கு
அளவுமே இல்லை
நெய்யிட்டு நெருப்பை
அணைப்பது போல
செய்வதால் எவ்விதப்
பயனும் இல்லை
நீரை ஊற்றி
நெருப்பை அணைக்கும்
திறமை மட்டும்
என்னிடம் இல்லை
ஆகவே எனது
நிலையை அறிந்து
நீயே வந்து
நெருப்பை அணைத்து
காலம் எல்லாம்
காத்திட வேண்டும்
கரையில் என்னைச்
சேர்த்திட வேண்டும்
குருகுலம், 14-4-2021, இரவு 11.45
No comments:
Post a Comment