108. எது புதுமை
சிலகணம் சேர்ந்து
சிலகணம் பிரிந்து
மறுமணம் புரிந்து
மறுபடி பிரிந்து
வாழ்வதென்பது
வழக்கம் ஆனது
"புதுமை" கூறும்
சிலரது வாழ்வு
வாழ்வின் அர்த்தம்
அறியா வரையில்
வாழ்வின் நெறிகள்
புரியா வரையில்
எடுத்தேன் கவிழ்த்தேன்
என்பது போன்று
வாழ்வதல்ல
"புதுமை" என்பது!
வாழ்ந்து முடித்த
முன்னோர் வழியில்
வள்ளுவன் காட்டிய
வாழ்க்கை நெறியில்
பெற்றோர் வாழ்ந்த
புரிதலின் நிலையில்
தொடர்ந்து செல்வதும்
"புதுமை" ஆகும்!
25-09-2011. குருகுலம்.
109 இரு முதியவர்
வடக்கில் ஓர் முதியவர்
விரதமிருந்தார்
ஊழலை எண்ணியே வருந்தி
தெற்கில் ஓர் முதியவர்
உள்ளே குமுறுரார்
ஊழலை செய்தே விரும்பி
"வடக்கு வாழ்கிறது
தெற்கு தேய்கிறது"
என்று இதைத்தான்
அன்றே சொன்னாரோ?
29-08-2011. குருகுலம்
Friday, September 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment