Thursday, September 29, 2011

அந்தமானுக்குச் சென்றிருந்தபோது, மாயாபந்தரிலிருந்து, கதம்தலா வழியாக போர்ட் ப்ளேயருக்கு வந்த போது நிர்வாணமாய் வாழும் ஜெரவா இனமக்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களை நாகரீக மக்களாக்குகிறோம் என்றபெயரில் செய்யப்படும் செயல்கள் சரியல்ல என்பது என்கருத்து. அதைக்குறித்து சென்னைக்குச் மீண்டும் கப்பலில் திரும்பிகொண்டிருந்தபோது எழுதிய பாடல்:

107. மெய் ஞானிகள்

"நிர்வாணம்"(முக்தி) அவர்க்குப் புதிதல்ல
நிர்வாணமாய் அவர் வாழ்வதினால்
"மெய்ஞானம்" அவர்க்குப் புதிரல்ல
"அஞ்ஞானம்" என்னவென்று அறியாததால்
வானமே கூறையாய் ஆனபின்னே
வாழ்வதற்கு அவர்க்கு வீடெதற்க்கு
காற்றே ஆடையாய் ஆனபின்னே
மாற்றுடை தேடும் மனம் எதற்கு

இயற்கையோடு இணைந்து வாழும்
"ஜெரவா" என்னும் மெய்ஞானிகள்
ஐயகோ ஆவார்கள் "அஞ்ஞானிகள்"
நம்முடன் தொடர்பு கொள்ளும்போது!

"நாகரீகம் தருகிறோம்" என்றெபெயரில்
நாம் செய்வதும் வீண் அஞ்ஞானமே
நம்மிடை வாழ அவர் வந்துவிட்டால்
நலன் ஏதும் பெறார் இதுதிண்ணமே!

இயற்கையுடன் வாழ அவரைவிடுங்கள்
இதுவே அவர்க்கு செய்யும் நன்மையாகும்
அவர்கேட்கவில்லை நம்வாழ்வை
ஆகவே செய்யாதீர் இவ்வநியாயம்

No comments: