Tuesday, November 29, 2022

 Bhakti Theology Song 1388


1388 Became an infant

 

What is there for me to ask

And what is there for you to do

Once this very life that live

Belongs you

 

So far you led me

And you will lead me further

I have that

Trust in you

 

You will do

What I asked

And you will also do

That I failed to ask

 

As I even don’t know

My own needs

You will accomplish

On your own

 

Of course, you alone

Told to ask

But I don’t have any desire

To ask

 

Though I told the

Reason for that

You alone know

The reason for that

 

I became like an infant

That does not know how to ask

You are doing like a mother

Who takes care of the baby

 

As the mother is there

Who knows her child’s need

Where is the need

For the baby to ask

 

If you bestow

Only this glorious situation

That is

More than enough for me

 

This also

Is not my request

But only the

Echo of my mind

 

Gurukulam, 21-6-2022, 10.30 p.m.

 

An infant lives a carefree life as it has its mother always with it to take care of its all needs.  Even it cannot understand or ask for its need. So like that, an infant living with the Lord as Her child is a wonderful experience in a bhakta’s life.  Of all the relationships the intimacy that a bhakta has with her Lord is when the Lord becomes her Mother.

 

1388 மழலைபோல் ஆனேன்

 

நான்னென்ன கேட்பது

நீயென்ன செய்வது

நான்வாழும் வாழ்வே

உனதான போது

 

இதுவரை நடத்தினாய்

இன்னமும் நடத்துவாய்

அந்த நம்பிக்கை

எனக்குமே உள்ளது

 

கேட்டதைச் செய்வாய்

கேளாமல் விட்டதை

நீயாகப் பார்த்து

நன்றாகச் செய்வாய்

 

என்தேவை எனக்கேத்

தெரியாத போனாலும்

நீயாகப் பார்த்து

நிறைவேற்றி வைப்பாய்

 

கேட்டிட என்னவோ

சொன்னது உண்மைதான்

ஆனாலும் கேட்டிட

மனமில்லை எனக்குத்தான்

 

அதற்கான காரணம்

நீசொன்ன போதிலும்

நான்கொண்ட காரணம்

உனக்கும் தெரியும்தான்

 

கேட்டிடத் தெரியாத

மழலைபோல் ஆனேன்

கேளாமல் செய்கின்ற

தாயான உனக்கு

 

அதன்தேவை அறிந்த

அன்னையும் இருக்கையில்

கேட்டிடத் தேவை

மழலைக்கு எதற்கு

 

இந்த நிலையிலே

தொடர்ந்துமே வாழும்

பெரும்பேறு தந்தால்

அதுபோதும் எனக்கு

 

இதுகூட னது

வேண்டுதல் அல்ல

எனது எண்ணத்தில்

மறு பதிப்பு

 

குருகுலம், 21-6-2022, இரவு 10.30


Monday, November 28, 2022

 Bhakti Theology Song 1387


1387 Sing lullaby

 

As you are living

In my heart

You returned it

Back to me

 

As it is not enough

For you to returning back it

You asked me to

Write poems again

 

Returning back [to the world]

Itself is a great achievement

Where is the time

To write poems

 

I have to take

So many medicines

Added to that

I have to take rest

 

More than that

I have to take care of my mother

And need to dance

According to her tunes

  

Forgetting all these works

For me to do

Why you ask me

To do this one

 

Ok, let it be

And I will try

Now I have to sleep

Let me do that now

 

Rest I will

Tell in the morning

Therefore as you sing lullaby

I am going to sleep

 

Chennai, Ramachandra Hospital, ‌‌5-5-2022. 11.00p.m.

 

From 4.00 a.m. I couldn't sleep as they started the treatment procedure. Both doctors and nurses came too often to check and take blood samples for tests.  So I cannot sleep till night 10.30. I told the doctor who came to the room that I needed some sleep. He said take good rest and nobody will disturb you. Both my sister and her husband who are staying with me became extremely tired and slept. Then one person from the canteen came and knocked on the door. Without disturbing my sister and her husband I asked him to take it. Then I couldn't sleep. So I thought that I should write another song to tease the Lord as I always loved it. Next to viraha bhakti songs I love to write teasing Him. Then I wrote this song.

 

1387 தாலாட்டு

 

நெஞ்சிலே நீயும்

வாழ்கிறாய் என்பதால்

நீயதை மீண்டும்

என்னிடம் தந்தாய்

 

தந்தது போதாது

என்றுமே எண்ணி

மீண்டும் பாடல்

பாடிச் சொல்கிறாய்

 

மீண்டு வந்ததே

மாபெரும் காரியம்

பாடல்கள் எழுதிட

ஏதிங்கு நேரம்

 

மருந்து மாத்திரை

நிறையவே உண்ணும்

அத்துடன் ஓய்வு

நானும் எடுக்கணும்

 

அதற்கு மேலாக

அம்மாவைப் பார்க்கணும்

அவள்போடும் தாளத்திற்கு

மீண்டும் ஆடணும்

 

இத்தனை காரியம்

இருப்பதை மறந்து

எதற்காக நீயிந்த

காரியம் சொல்கிறாய்

 

சரிவிடு போகட்டும்

முயற்சியும் செய்கிறேன்

இப்போது தூங்கணும்

அதை மட்டும் செய்கிறேன்

 

மற்றதை காலையில்

மீண்டும் சொல்கிறேன்

ஆகவேநீ தாலாட்ட

நானுமே தூங்கறேன்

 

 சென்னை ‌‌5-5-2022. இரவு 11.00_


 Bhakti Theology Song 1386


1386 I am complete

 

If you ask me

Come back to see

I will come again

To see this world

 

 

If you call back

By saying that

Enough you have seen

I will come to with joy

 

 

Indeed it is your

Beautiful creation

I enjoyed it

Each day enjoying it

 

I found the

Fruit of mukti in you

By living with you

I found contentment

 

 

Once I reach you

Permanently I will

Live with you

Eternally forever

 

Who will understand this

Other than those received

They will only thank you

For receiving it

 

Joining that group of bhaktas I also

Giving thanks

To you

 

Bowing your

Lotus feet

I proclaimed this

For the world to know

 

Chennai. Ramachandra hospital, 5-5-2022. 9.30 pm

 

As I was admitted in the hospital heart related problem, on 6th will be known whether I need open heart surgery or only a pacemaker.  One way I am happy to leave this earth in this stage as I have nothing to accomplish, except my debt to my mother.  So as I was thinking about this I wrote this song.

There is no need for any commentary for this poem, perhaps my final song. Or will come back again to enjoy this beautiful creation by God to celebrate my bhakti along with every Bhakta of the Lord.

 

[05/06, 10:10 p.m.] Db:

 

1386 நிறைவைக் கண்டேன்

 

கண்டிடு மீண்டும்

என்று நீ சொன்னால்

காண வேண்டி

மீண்டு வருவேன்

 

கண்டது போதும்

என்று அழைத்தால்

களிப்புடன் நான்

உன்னிடம் வருவேன்

 

நன்று நன்று நீ

செய்த உலகம்

நானிதை நாளும்

துய்த்துமே வாழ்ந்தேன்

 

உய்வித்த பலனை

உன்னிலே கண்டேன்

உன்னுடன் வாழ்ந்து

நிறைவையும் கண்டேன்

 

உன்னிடம் வந்தபின்

நிரந்தரமாக நான்

நீடித்து உன்னுடன்

நீடூடி வாழ்வேன்

 

பெற்றவர் அன்றி

வேறெவர் அறிவார்

பெற்றதற்காக அவர்

நன்றிதான் சொல்வார்

 

அந்த அடியார்

கூட்டத்தில் இணைந்து

அடிமை நானும்

நன்றியே சொல்லி

 

பதமலர்ப் பணிந்து

பாடியே துதித்து

உலகம் அறிந்திட

உரைக்கவே உரைத்தேன்

 

சென்னை. 5-05-2022, 9.30 p.m.