Thursday, February 16, 2023

 Bhakti theology songs 1426 to 1430


1426 நடிக்க முயன்றேன்

 

உன்சித்தம் நடக்கட்டும்

என்று சொன்னாலும்

என்சித்தம் உனதாக்கி

செய்திடு என்றேன்

 

அதற்கான காரணம்

ஆயிரம் சொன்னேன்

அதன்படி நீசெய்ய

ஆயிரம் செய்தேன்

 

எப்படிப் பேசி

என்னென்ன செய்தால்

உன்மனம் இளகும்

என்றுமே எண்ணி

 

எப்படி எல்லாம்

நன்றாக நடித்து

உன்னையே ஏய்த்திட

நானும் முயன்றேன்

 

ஆயினும் பிள்ளை

செய்திடும் குறும்பை

ரசித்திடும் தாயாய்

நீயுமே மாறி

 

அதற்கு ஏற்ப

என்னிடம் பேசி

உள்ளாக சிரித்து

நீயுமே மகிழ்ந்தாய்

 

உன்னிந்த செயலை

நானுமே உணர்ந்து

உன்மீது கோபம்

அதிகமே கொண்டு

 

அழுது புரண்டு

அடம்நான் பிடிக்க

அள்ளி எடுத்து

அணைத்துக் கொண்டாய்

 

அந்த அணைப்பிலே

என்னையே மறந்து

அமைதியாய் உன்

தோளிலே சாய

 

தட்டிக் கொடுத்து

என்னைத் தேற்ற

முற்றாக என்னை

உன்னிடம் தந்தேன்

 

இந்த நெருக்கம்

இருந்திடும் போது

எது நடந்தாலும்

நடக்கட்டும் என்று

 

என்சித்தம் துறந்து

உன்னிலே கலந்து

உன்சித்தம் அதனை

ஏற்றுக் கொண்டேன்

 

குருகுலம், 3-9-2022, இரவு, 11.00

 

One aspect of bhakti is to try to bend God by every means to accomplish one’s own wish. But sometimes God, like a mother who enjoys the way her child to bend her will to accomplish its need, God do the same with a bhakta. As I was thinking about it I wrote this song.

 

1427 நினைந்திடு நெஞ்சே

 

நெஞ்சே உனக்கொரு

சேதியும் உண்டு

நீடித்த கருணை

உன்மேல் கொண்டு

 

இறைவன் செய்திடும்

செயல்களை எண்ணி

நன்றி சொல்வது

உனக்குமே நன்று

 

ஒரு நொடியேனும்

உனை மறந்தானா

உன்னுடன் வாழ்ந்திட

அவன் மறுத்தானா

 

உன்னிலை உணர்ந்து

உன்தேவை அறிந்து

உனக்குத் தந்திட

அவன் மறத்தானா

 

இணை பிரியாது

உன்னுடன் இருக்கும்

அவனை மறந்து

ஆயிரம் நினைந்து

 

சுய நலத்தோடு

செயல் பட்டாலும்

விட்டுனைப் பிரிந்து

அவன் சென்றானா

 

யாரிடம் சென்று

எப்படிச் சொல்லி

காரியம் செய்யலாம்

எனநீ நினைந்து

 

செய்பவர் இன்றி

தவித்திடும் போது

தூதரை அனுப்ப

அவன் மறந்தானா

 

இன்னும் சொல்லிட

எத்தனை உண்டு

இதுபோல் எத்தனை

நடந்ததும் உண்டு

 

இதுவரை காத்தவன்

இன்னமும் காப்பான்

என்பதை மட்டும்

மனதிலே கொண்டு

 

நல்லதே நடக்கும்

என்றுமே நம்பி

நடத்திடும் அவனை

மட்டுமே நன்னி

 

துதித்துப் பாடி

வாழ்ந்திடப் பழக்கு

செய்நன்றி கொண்டு

அவனையே அண்டு

 

குருகுலம், 6-9-2022, காலை, 3.30 am

 

Again I got up 2.30 am.  Then unable to sleep I got up from the bed and made a cup of tea and began to deeply meditate about the current situation.  As the day time care taker got married, how though her mother will come and help, still both me an

d my mother have to readjust our lives according to the demand of time. In the past I managed. But considering my health I cannot adjust too much. Then I was thinking various alternative means to take care of our needs.  Then I told my heart to stop all kinds of such thinking and just recall the way God always interfered in my life and arranged all kinds of help in time.  As inspiration flowed I wrote this song.

 

1428 He will dwell in the atman

 

How many explanations

Might be given

It is impossible

To explain clearly

 

However one approaches

In whichever angle

It is impossible for the brain

To see it completely

 

The reality is that

God was there

Even before we

Gave some explanation using words

 

Giving Him a Name

And giving a meaning to it

It is human who

Created the Scripture

 

But not stopping there

What he has done

Indeed is

Very cruel

 

Creating religions

In the name of scriptures

And creating so many

Rituals in them

 

Thinking that

They are not enough

Giving various code of contacts

To follow them meticulously

 

And giving rules

How and when

And why they

Need to be performed

 

Converting rituals

He created religion

And tried to imprison

God within it

 

Unable to remain

Within that prison

God already

Escaped from it

 

Many people still not

Realizing it

Sought Him

Only through religions

 

God who cannot be reached

If one searches

Leaving the place where He dwells

And search every other place

 

Transcending scripture and religion

If we imprison in our heart

He will dwell there

Unwilling to escape from it

 

Helping us to understand

Without the need of explanations

Make us to worship Him

Without rituals

 

Transcending religion and Scripture

Even transcending human language

He will dwell silently

In our heart

 

Gurukulam, 9-9-2022, 11.30 p.m.

 

1428 ஆன்மாவில் இருப்பன்

 

விளக்கங்கள் எத்தனை

எப்படித் தந்தாலும்

முற்றாக விளங்க

வைக்க இயலாது

 

எந்தக் கோணத்தில்

எப்படிப் பார்த்தாலும்

முழுதாகப் பார்த்திட

மூளைக்கு முடியாது

 

எழுத்திலே வடித்துக்

கொடுக்கும் முன்பாக

இருந்தவன் இறைவன்

என்பதே உண்மை

 

அவனுக்குப் பெயர்வைத்து

அதற்கொரு பொருள்தந்து

மறையாக்கி அதனைத்

தந்ததோ மனிதன்

 

அத்தோடு அவனும்

நிறுத்திக் கொள்ளாது

அதன்பின் செய்ததே

மாபெரும் கொடுமை

 

மறையின் பெயராலே

மதங்களைப் படைத்து

அதற்குள்ளே ஆயிரம்

சடங்குகள் சமைத்து

 

அவைமட்டும் போதாது

என்றுமே எண்ணி

அவற்றை பின்பற்ற

விதிகளை வகுத்து

 

எப்போது எதனை

எப்படிச் செய்யணும்

என்றே பலவித

வழிமுறைத் தந்து

 

சடங்கினை மதமாக்கி

வழிபாடு என்றான்

மதத்திற்குள் இறைவனை

சிறையும் வைத்தான்

 

அந்த சிறைக்குள்ளே

இருக்க இயலாது

எப்போதோ இறைவன்

தப்பித்துச் சென்றான்

 

ஆயினும் அதனை

உணராத பலரும்

மதத்தின் மூலமே

அவனை நாடினர்

 

இருக்கும் இடம்விட்டு

இல்லாத இடம்தேடி

எப்படி அலைந்தாலும்

கிடைக்காத இறைவன்

 

மறைதந்த மதம்தாண்டி

மனதினில் சிறைவைத்தால்

தப்பிக்க மனமின்றி

தங்கி இருப்பான்

 

விளக்கங்கள் இல்லாது

விளங்கிட வைத்து

சடங்குகள் இல்லாது

வழிபட வைத்து

 

மதம்தாண்டி மறைதாண்டி

மனித மொழிதாண்டி

அமைதியாய் ஆன்மாவில்

குடிகொண்டு இருப்பான்

 

குருகுலம், 9-9-2022, இரவு, 11.30

 

1429

 

மீண்டும் மீண்டும்

திருவடி சேர்ந்து

முற்றாய் உனது

கிருபையை சார்ந்து

 

வருவது அன்றி

வேறென்ன செய்வேன்

திருவடி யன்றி

புகலிடம் அறியேன்

 

எத்தனை முறையோ

இதையே சொன்னேன்

வேறெதை நானும்

மீண்டும் செய்வேன்

 

நாடிய மனிதர்

ஓடியேப் போக

நீமட்டும் என்னை

நாடியே வந்தாய்

 

எவருக்குப் புரியும்

என்னிந்த பாரம்

எடுத்துச் சொல்ல

மொழியும் காணோம்

 

சொல்லிடும் முன்பே

அறிந்தாய் நீயும்

ஆகவே துணையாய்

வந்தாய் என்றும்

 

கண்ணுக்குத் தெரியாது

நீயும் செய்திடும்

காரியம் தன்னை

நானும் அறிவேன்

 

புத்திக்குப் புரியா

உனது அருளை

அமர்ந்தே இருந்து

அனுதினம் உணர்ந்தேன்

 

ஆயினும் பேதைமை

கொண்டே மனது

அனைத்தையும் மறந்து

புலம்பிடும் போது

 

தூதரை அனுப்பி

தேறுதல் தந்தாய்

துணையாய் வந்திட

உறுதியும் தந்தாய்

 

என்னிடம் உள்ள

இயற்கை குணமும்

என்னை மீண்டும்

ஆட்கொள்ளும் போது

 

உள்ளே இருந்து

உன்குரல் ஒலிக்க

நான்னதைக் கேட்டு

என்னை வென்றேன்

 

உலகம் போகும்

இரைச்சலை மீறி

மெல்லிய உனது

குரலை நாடி

 

மீண்டும் மீண்டும்

உய்ந்திட வேண்டும்

நீயே அதற்கும்

உதவிட வேண்டும்

 

ஆகவே உனது

திருவடி வந்து

அபயம் இட்டு

உன்னடிப் பணிந்து

 

வாழும் வாழ்க்கை

ஒன்றே போதும்

அதையே நீயும்

அருளிட வேண்டும்

 

குருகுலம், 10-09-2022, காலை, 5.00


No comments: