1471 to 1475
1471 ஆறுதல் அடையும்
அழுதும் மனது
ஆறாத பொது
ஆறுதல் தருவது
யாரெனக் கூறு
பாடுள்ள மனிதரை
நாடிச் செல்வது
வீணென எனக்கும்
தெரியும் பாரு
சொல்லித்
தீர்த்தல்
பாரம் குறையும்
அழுதுத்
தீர்த்தால்
மனதும் ஆறும்
என்பது உண்மை
என்கிற போது
இரண்டும்
கிடைக்கலை
காரணம் யாது
பிறரிடம்
சொன்னால்
புரளியாய் மாறும்
மனதின் பாரமும்
பெருகிப் போகும்
அழுதபின் ஆறுதல்
அடைந்த மனது
நீதேற்ற
மறுத்தால்
எப்படி ஆறும்
என்னதான் காலம்
மாறிய போதும்
உன்னருள் ஒன்றே
தீர்வெனக் காகும்
அழும்போது மனது
உறவினை நினைந்து
தந்த உனக்கு
நன்றியும் கூறும்
அதிலுள்ள உனது
கிருபையை
நினைந்து
அனுதினம்
உன்னையேத்
துதிக்கத்
தோன்றும்
பிறப்பு இறப்பு
வாழ்வு பிரிவு
இயற்கையின்
நியதியாய்
இருந்த போதும்
இந்த நியதியும்
நீ வைத்ததாலே
அதனை ஏற்று
வாழ்ந்திட
வேண்டும்
ஆயினும் மனது
அழும்போது
மட்டும்
உடனே உன்கரம்
அணைத்திட
வேண்டும்
அந்த அணைப்பிலே
நான்பெரும்
சுகத்தை
எண்ணியே மனதும்
ஆறுதல் அடையும்
கும்பகோணம், 4-1-2022, மாலை, 7.30
1472 Seeing in you
The mother who
Fed us with milk by
Showing love and
Adding affection
I made her as ash
By burning on the fire
And immersed
It in the water
After doing all
The ten days ritual
And following all the
Ritual codes meticulously
Though I remain
Alone as all
The relatives
Have gone after the ritual
Keeping her
In my memory
Thinking about her love
I will live each day
Once I cry
By shedding tears
As the heavy heart
Became light one
The memories will
Continue to come
Like the waves
Unable to forgot her
That time you
As you stay with me
To show
Mother’s affection
Seeing her
In you
Living in you
And completing it
I will live with you
Having an
Eternal relationship with you
Not knowing separation
Kumbakonam, 5-1-2023, (6-1-2023) இரவு 1.30
I came to Kumbakonam where my
brother was performing the rest of the 13 days final rituals for me.
Yesterday was known as ‘Pattu’, on the 10th day we children and
relatives have to give her the final food on this earth, serving various dishes
that she likes the most. After serving all the food on a cloth when we
have to go round and do the namaskaram to my mother, unable to control me I
began to cry loudly in front of everyone. Though my brother tried to stop
me, the main priest said, ‘allow him to cry. This time you all should cry
for your mother thinking all that she has done for you in this life.
Unless you cry genuinely that atman won’t depart peacefully from this
earth. I know how he took care of your mother and your mother will be
pleased to see that at least one person is genuinely grieving for her.
After the ritual and bath, we all
returned back to the room. I was given the very same room where my mother
lived for a few months here with my brother back in 2012. As I became
very tired though I slept after 8.30, when I got up around 1.00 am, unable to
sleep, I sat on the very same cot on which my mother was sleeping here. I
too stayed in the same room with her to take care of her sleeping on the
floor. When most of the other distant relatives have gone after today’s
main event, when I call back Pattinattar’s songs lamenting for his mother, I
wrote this song with many tears.
1472 உன்னிலே கண்டு
பாசத்தைக் காட்டி
நேசத்தைக் கூட்டி
பாலுமே ஊட்டி
வளர்த்த அன்னையை
தீயிலே போட்டு
சாம்பலும் ஆக்கி
நீரினில் இட்டு
நானுமே கரைத்தேன்
பத்தநாள் காரியம்
பலவுமே செய்து
சுத்த பத்தம்
எல்லாம் பார்த்து
சடங்கினை
முடித்து
சொந்தங்கள்
திரும்ப
தனிமையில் நான்
இருந்த போதும்
நினைவினுள்
வைத்து
நாளுமே எண்ணி
பாசத்தை எண்ணி
நானும் வாழ்வேன்
கண்ணீர் விட்டு
கதறி அழுதபின்
கனத்த இதயம்
இலகுவாய் மாற
நினைவுகள்
மட்டும்
நீங்காது என்றும்
தொடர்ந்து
வாழ்வில்
அலையென மோதும்
அப்போது உனது
துணையும் இருந்து
அன்னையின் பாசம்
நீயுமே காட்ட
உன்னிலே அவளை
என்றுமே கண்டு
உன்னிலே வாழ்ந்து
வாழ்வினை
முடித்து
என்றுமே பிரிவு
இல்லாத உறவு
உன்னிடம் கொண்டு
நானும் வாழ்வேன்
கும்பகோணம் 5-1-2023,(6-1-2023)
இரவு 1.30
1473 Live in
the relationship
I came unto you
As I will find
solace
Once I share
My heart burden to
you
Knowing my heart
Well in advance
You also came
Before I called you
When I remain
In silence
Struggling to find
Words to convey
You understood
my thought
in the tears
that flowed from my
eyes
Not giving
Any kind of
response to me
Coming and sitting
Next to me
Wiping the tears
By your fingers
You pulled me
On your laps
When I lean
On your laps
Which give more
comfort
To that of a mother
Gently brushing
My hairs
You also remain
silent
By patting my back
How many losses
Might have come in
life
There is no loss
Equal to that of a
mother
But there is no
Greater love than
yours
That you show
More than a mother
I will receive back
double portion of
What I have lost
And will live in
that relationship
Which never get
lost
Kumbakonam, 5-1-2023,
7.30 am.
As I was staying in
the very same room where my mother stayed a few months in the past and sleeping
on the same cot I often recalled my life with her and now without her. No
amount of words are going to convey my feelings properly. But the only
consolation that I have is that my relationship with her still continues though
the body has gone and the Lord is there to comfort me.
1473 உறவில் வாழ்வேன்
உன்னிடம்
சொன்னால்
ஆறிடும் என்று
ஓடியே வந்தேன்
நானுமே சொல்ல
என்மன ஓட்டம்
முன்னமே அறிந்து
நீயுமே வந்தாய்
நாடியே என்னை
சொல்லிட வார்த்தை
தேடியேத் தவித்து
மவுனமாய் நானும்
இருந்த போது
விழிகளின் ஓரம்
கசிந்திடும்
நீரில்
சொல்ல வந்ததை
நீயுமே
உணர்ந்தாய்
பதிலாக ஒன்றும்
நீயும் தாராமல்
பக்கத்தில் வந்து
அமர்ந்து கொண்டு
உன்விரல்
நுனியால்
விழிநீர்
துடைத்து
மடிமீது என்னை
சாய்த்துக்
கொண்டாய்
அன்னையின் மடிபோல
ஆறுதல் தருகின்ற
உன்மடி மீதிலே
நான்சாய்ந்த போது
மெதுவாக எனது
தலையும் கோதி
முதுகைத் தடவி
மவுனம் காத்தாய்
எத்தனை இழப்புகள்
வாழ்வினில்
வந்தாலும்
அன்னையின்
இழப்பிற்கு
ஈடொன்றும் இல்லை
அன்னையின் மேலாக
நீயுமேத்
தருகின்ற
உன்அன்புக்கு
மாறாக
வேறொன்றும் இல்லை
இழந்ததை
இரட்டிப்பாய்
உன்னிடம்
பெறுவேன்
இழக்காத உறவில்
என்றும் வாழ்வேன்
கும்பகோணம், 5-1-2023,காலை 7.30
1474
உனக்கு சேவை
நானுமே செய்ய
எனக்குத் தந்தாய்
நீயொரு வாய்ப்பு
பலமுறை உன்னை
பிறரிடம் அனுப்ப
பலவித முயற்சிகள்
நான்செய்த போதும்
என்னை விட்டு
சென்றிட மறுத்து
இறுதி வரையில்
என்னுடன்
இருந்தாய்
நீயன்றி
என்வாழ்வு
நிறைவு பெறாது
என்றுமே எண்ணி
என்னுடன்
இருந்தாய்
ஆயினும் இப்போது
குறைவுள்ள
வாழ்க்கை
வாழ்ந்திட வைத்து
நீயுமே சென்றாய்
இறுதியில்
என்கையால்
பாலும் அருந்தி
உன்னுயிர் தன்னை
நீயுமே விட்டாய்
எஞ்சிய என்வாழ்வு
வெறுமையாய்
இருக்கும்
உன்னிடம் நிறப்ப
யாருமே இன்றி
தெய்வத்தால் கூட
தாயிடம் நிறப்ப
முடியாது என்பதே
மாபெரும் உண்மை
அனாலும் நானும்
வாழத்தான்
வேண்டும்
என்பதே இப்போது
மாபெரும் கொடுமை
ஆனாலும் அனுதினம்
உன்னை நினைந்து
உலக வாழ்வை
நானும் முடித்து
என்னால் முடிந்த
சேவை செய்து
உனது அன்பை
நாளும் நினைந்து
உன்நினைவோடு
உயிரும் போக
என்னோட்டம்
முடிப்பேன்
இத்தரை மீது
சுவாமிமலை, 7-1-2023, மாலை ஆறு
1475
எனக்காக
அழுகிறாய்
அதுபோதும் எனக்கு
இனிமேல்
நான்செய்ய
ஒன்றில்லை உனக்கு
மதலையாய்
பிறந்தாய்
மகனாக வளர்ந்தாய்
முதுமையில்
எனக்கு
தாயாக ஆனாய்
மீண்டும் உனக்கே
பிள்ளையாய்ப்
பிறந்து
வாழ்ந்திடும்
வாய்ப்பு
இல்லை எனக்கு
ஆனால் உனது
மனதில் இருப்பேன்
அங்கே உனது
சேயாய் வாழ்வேன்
உடல்தான் போனது
உறவோ உள்ளது
அங்கே தாய்சேய்
உறவும் தொடருது
இதுவரை எனக்காய்
வாழ்ந்தது போதும்
இனிமேல் உனக்காய்
வாழனும் நீயும்
எங்கோ இருந்து
உன்னை பார்ப்பேன்
தேவைப் பட்டால்
உடனே வருவேன்
எங்கே எப்படி
இனிநான்
பார்ப்பேன்
என்று புலம்பி
நீ கலங்காதே
தேவை உள்ளோர்
உடலில் இருப்பேன்
தேடியே வந்து
உதவி கேட்பேன்
வாடும் பயிருக்கே
வாடிய பூமியில்
நாடும் மனிதர்
நடுவில்
இருப்பேன்
உன்னால் முடிந்த
சேவை செய்து
நீபட்ட எஞ்சிய
கடனைத் தீரு
எதுவரை அழனுமோ
அதுவரை அழுது
இறுதியில் உன்னை
நீயே தேற்று
தாய்சேய் உறவு
பொதுவான போதும்
அதிலும் ஆயிரம்
மாற்றம்
இருக்கும்
நாம்கொண்ட உறவோ
தனித்தே
இருக்கும்
நமக்கு மட்டுமே
புரிந்தும்
இருக்கும்
இனிநான் சொல்ல
ஏதுமே இல்லை
ஆறுதல் சொல்ல
வார்த்தையும்
இல்லை
சுவாமிமலை, 8-1-2023, மாலை 7.00
No comments:
Post a Comment