Thursday, February 16, 2023

 Bhakti Theology Songs 1431 to 1435


1430 சமயம் வந்தது

 

எங்கே எப்போ

எப்படி என்று

எனக்கு இப்போ

தெரியாதி ருந்தாலும்

 

ஏற்றி வைக்கத்

தெரிந்த உனக்கு

இறக்கி வைக்கத்

தெரியாமல் போகுமா

 

பாரம் என்று

சொல்ல வில்லை

தந்த பொறுப்பை

மறுக்க வில்லை

 

அதுபோல் நீயும்

தந்த வாக்கு

அதையே நானும்

மறக்க வில்லை

 

இப்போ உள்ள

நிலைமை தன்னை

நீயும் சற்று

எண்ணிப் பார்த்து

 

தக்க சமயம்

வந்த னென்று

தந்த வாக்கை

தரவும் வேண்டும்

 

கையை மீறி

நிலைமை போனால்

எனது கதியும்

என்ன வாக்கும்

 

அதனை நீயும்

அறிந்த போதும்

எனது மனதின்

தன்மை உணர்ந்து

 

ஏற்றபடி நீ

என்னை நடத்தி

தாக்குப் பிடிக்க

தெம்பை அளித்து

 

தந்த பொறுப்பை

கொண்டு செலுத்த

தக்க உதவி

செய்ய வேண்டும்

 

எனது நிலையை

சொல்லி யாச்சு

இனி பொறுப்பு

உனது மாச்சு

 

நம்பி உன்னை

சார்ந்து கொண்டு

வாழும் வாழ்க்கை

எனது மாச்சு

 

குருகுலம், 12-09-2022, இரவு, 11.15

 

Again the same tussle about taking care of my mother as well as looking after my health.  Everyone has her limitation—relatives, friends, or caretakers.  Particularly when helpers work only for the sake of money we cannot and should not expect more than what they are willing to do.  What they can do never comes, particularly when taking care of aged and sick people.  We cannot expect them to work for the remuneration that they receive. It is a difficult job to take care of old people. That needs more mental strength. When the helpers come just earn more money [with less work], naturally they will work what they want and not what we expect.  So as I had to struggle both in day and night without proper sleep and with new problem of pain in my elbows, I was not sure what to do. However after lots of discussion when I returned back to square one, as usual I took the matter to the Lord and when I was talking to Him as the words ‘You know how to unload as you have loaded’ I wrote this song as part of my prayer and meditation. I find more comfort in writing a song to uttering lots of words in the name and form of prayer.

 

1431 அழத்தான் வேண்டும்

 

அழுதேனும் இனிமேல்

ஆறுதல் அடைவேன்

அதுவன்றி வேறு

நானென்ன செய்வேன்

 

தேறுதல் தாராது

எங்குதான் சென்றாயோ

தெய்வமே என்னையும்

ஏன்நீ மறந்தாயோ

 

தவிக்குது மனது

செய்வது அறியாது

தேறுதல் தந்திட

வேறாரும் கிடையாது

 

உன்னிடம் வாராமல்

ஒருவழி கிடையாது

தாமதம் செய்வதேன்

அதையேனும் நீகூறு

 

வேண்டிடும் விடுதலை

விரைந்தே தரவேண்டும்

காரணம் அதற்குண்டு

நீயதைப் புரியணும்

 

தாமதம் செய்வதில்

பயனுமே இல்லையே

விரைந்துமேத் தந்து

என்னையும் காப்பாயே

 

இத்தனைச் சொல்லியும்

கேளாது இருந்தால்

இனிம்மேல் சொல்லிட

வேறேதும் இல்லையே

 

சொல்லும்முன் புரிந்திட

நீயுமே இருக்கையில்

சொல்வது புரியலை

என்றுமே நடித்தாயே

 

சொன்னாலும் புரியாது

தன்னாலும் தெரியாது

இருந்திட நீயென்ன

என்போன்ற மனிதனா

 

என்னதான் மனிதனாய்

இப்புவி வந்தாலும்

எப்போதும் தெய்வந்தான்

என்பதை மறுப்பாயோ

 

உன்னையே மறுக்க

உன்னாலே முடியுமா

என்னையும் ஏற்காது

தள்ளிட இயலுமா

 

என்குரல் கேட்காது

உன்செவி மந்தமா

என்னிலை பாராது

உனகண் இருக்குமா

 

இளகத மனமும்

அருளாத கரமும்

இருந்திட நீயென்ன

கல்லான தெய்வமா

 

இத்தனை சொல்லியும்

அருளாது போனால்

அழாமல் என்னாலே

இருந்திட முடியுமா

 

குருகுலம், 13-9-2022, இரவு 11.00 p.m.

 

1432 தன்போல மணக்கும்

 

வாசித்துப் பார்த்தாலும்

யோசித்துப் பார்த்தாலும்

வந்து சேரானே

இறைவன் நம்மிடம்

 

தேடியே அலைந்தாலும்

தினம்தினம் பணிந்தாலும்

நாடியே வாரானே

நம்மிடம் அவனும்

 

சமயங்கள் எப்படி

சமைத்து வைத்தாலும்

சடங்குகள் அவற்றுள்

எத்தனை இருந்தாலும்

 

அதனால் வசப்பட்டு

அவற்றுள் அகப்பட்டு

ஆர்வமாய் ஓடி

வாரானே நம்மிடம்

 

ஏதுமே செய்யாமல்

எதையுமேத் தேடாமல்

மவுனமாய் நாமும்

இருந்தாலே போதும்

 

நம்தேவை அறிந்து

நாடியே வருவான்

மெல்லிய குரலால்

நம்மிடம் சொல்வான்

 

ஆகவே அவனும்

சொல்வதைக் கேட்டிட

அலசடிப் படாமல்

அமைதியும் காக்கணும்

 

அவன்பேசும் முன்பாக

கேள்வியும் கேட்காது

அவன் சொன்னபின்னே

வாதங்கள் செய்யாது

 

ஆவியில் எளிமையும்

மனதிலேத் தாழ்மையும்

சிந்தையில் தூய்மையும்

கொண்டுமேப் பணிய

 

சொல்லியேத் தருவான்

சொன்னதின் பொருளை

செயல்பட வைப்பான்

நாமதை ஏற்க

 

மொட்டுமே மலர்ந்து

பூவாகும் போது

வாசனை வீசுமே

காற்றிலேக் கலந்து

அதுபோல் நம்வாழ்வு

அவன்தொட மலர்ந்து

மணக்குமே தன்னாலே

அவனடிப் பணிந்து

 

குருகுலம், 14-9-2022, இரவு, 11.45 p.m.

 

1433 தனிவழி எதற்கு

 

எதிர்எதிர் திசையினில்

இருவரும் சென்றால்

இணைந்து பயணம்

செய்வதும் எப்படி

 

என்னுடன் நடந்திட

நானுமே சொல்ல

உன்வழி வந்திட

கூறுவ தெப்படி

 

என்வழி எதுவென

எனக்குமேப் புரியும்

நீசொன்ன வழிதான்

உனக்குமேத் தெரியும்

 

உன்வழி எதுவென

யாருக்குத் தெரியும்

துணிந்தே நடந்திட

எப்படி முடியும்

 

எங்கே எவ்விதம்

திருப்பம் வந்திடும்

எங்கே கவமாய்

இருந்திட வேண்டும்

 

என்பது என்வழி

சென்றாலேத் தெரியும்

முன்பே சென்றதால்

பயணமும் புரியும்

 

ஆனால் உன்வழி

அப்படி இருக்குமா

உனையன்றி பிறருக்கு

ஏதுமேத் தெரியுமா

 

கண்ணைக் கட்டி

காட்டினில் விட்டு

நடந்திடு என்றால்

நடக்க முடியுமா

 

கூடவே இருக்கிறேன்

என்றுமேக் கூறுவாய்

தேவைப் படும்போது

விலகியே ஓடுவாய்

 

ஏன்நீ இப்படி

செய்கிறாய் என்றால்

சோதித்துப் பார்த்தேன்

என்றுமே சொல்வாய்

 

யாருக்கு வேண்டும்

உன்னிந்த சோதனை

எனக்கேன் தேவை

வீணினிந்த வேதனை

 

இதுவரை சோதித்து

சாதிக்கா ஒன்றை

இனிமேல் சோதித்து

காட்டவாப் போகிறாய்

 

ஆகவே வழக்கம்போல்

என்வழி வந்திடு

அதையே உனது

சித்தமாய் மாற்றிடு

 

உனது பக்தனாய்

மாறிய பின்னே

தனிவழி இனிமேல்

உனக்குமே ஏது

 

குருகுலம், 7-10-2022, இரவு, 10.45 p.m.

 

Again my mother fell down on 1st October night. With the help of four person I managed to lift her from the floor to put on the cot. As there was no one I rushed to lift her on my own.  In that process I injured the left hand where there is pacemaker is there.  Then it created much pain to me.  Next few days I suffered also due to pain in my right hand elbow.  So I thought of finding some other alternative to take care of my mother.  But none of them worked and I returned back to square one. I won’t mind to keep my mother in the ashram to take care of her.  But considering my health and lack of proper support, particularly in the night time to take care of my mother, it will remain a constant challenge for me in the days to come.  So this night when I was discussing this issue with the Lord, as inspiration came I wrote the next three songs.

1434 என்வழி வந்திடு

 

என்வழி எளிதாக

இருந்திடும் போது

உன்வழி எதற்காக

வந்திட வேண்டும்

 

இராஜ பாட்டையாய்

என்வழி இருக்கும்

பலரும் நடக்க

இடமும் கிடைக்கும்

 

கரடு முரடான

பாதையும் இல்லை

கல்லுக்கும் முள்ளுக்கும்

இடமுமே இல்லை

 

எளிதாக இதிலே

எவரும் நடக்கலாம்

இறுதியில் நிச்சயம்

ஊர்ப்போய் சேரலாம்

 

நேரான கோடாக

என்பாதை இருக்கும்

நடந்து செல்ல

சுகமாக இருக்கும்

 

பயணத்தில் எவ்வித

பயமுமே இல்லை

துணையென எவரும்

தேவையும் இல்லை

 

ஆகவே என்னுடன்

நீயுமே வந்தால்

எவ்வித ஆபத்தும்

உனக்குமே இல்லை

 

உன்வழி இப்படி

இருக்குதாப் பாரு

இத்தனை குறுகலாய்

இருப்பதேன் சொல்லு

 

வளைவு நெளிவுகள்

ஆயிரம் உண்டு

யாரிதில் நடப்பார்

துணிவுமேக் கொண்டு

 

கூடவே நடப்பதாய்

நீயுமேக் கூறுவாய்

ஆயினும் இடையே

போக்குமே காட்டுவாய்

 

தொடர்ந்து நடப்பதாத்

திரும்பிப் போவதா

என்றுமேப் புரியாது

திகைத்திட வைப்பாய்

 

இதுயென்ன விளையாட்டு

என்றுமேக் கேட்டால்

இதுஎன் வாடிக்கை

என்றுநீ சொல்லுவாய்

 

ஆகவே வீணாக

உன்வழிப் போகாது

பக்தன் சொல்வதை

நீயுமேக் கேளு

 

உன்னிலே ஒன்றாக

கலந்த பின்னாலே

என்வழி உன்வழி

எனஏது உண்டு

 

குருகுலம், 7-10-2022, இரவு 11.30

1435 உன் வழி நல்லது

 

ஒருவழிப் பாதையாய்

உன்வழி இருக்கு

அதுவே எனது

கவலையாய் இருக்கு

 

துணிந்து நுழைந்திட

முடியவும் இல்லை

நுழைந்தால் திரும்பிட

வழியும் இல்லை

 

ஒருவழி அடைய

பலவழி திறக்கும்

எனஉன் வேதம்

சொன்ன போதும்

 

இதுவரை மாற்று

வழியும் காணோம்

நுழைந்த எனக்குமே

உன்மனம் புரியும்

 

உனது வலையில்

அகப்பட வேண்டி

சொல்லி வைத்தாய்

வார்த்தைகள் பலவும்

 

பிறருக்குப் பலவழி

திறக்கும் போது

எனக்கு மட்டுமே

மூடியே இருக்கு

 

தப்பித்துச் செல்வான்

என்றுமே எண்ணி

வந்த வாயிலை

அடைத்து வைத்தாயா

 

தட்டியே போது

திறந்த பின்னே

நுழைந்தநீ தாளினைப்

போட்டு விட்டாயா

 

இருவும் ஒருவிதம்

நல்லது என்பேன்

என்னுடன் நீயும்

இருப்பதினாலே

 

திரும்பிட உனக்கும்

வழியுமே இல்லை

தப்பிதுச் செல்ல

வாய்ப்பும் இல்லை

 

எனவே உன்வழி

ஒருவழி யாவது

எனக்குத்தான் என்றும்

மிகமிக நல்லது

 

குருகுலம், 8-10-2022, இரவு 12.30 am


No comments: