Thursday, February 16, 2023

 1461 to 1465


1461 பொறுப்பு உனது

 

செய்வது நீயென

ஆன பினாலே

பொறுப்பையும் ஏற்பது

நல்லது சொன்னேன்

 

என்னதான் உன்வழி

தனிவழி ஆயினும்

உனக்கென நீதி

தனித்திருந்தாலும்

 

அதன்வழி நானும்

சென்றிடும் போது

நமக்குள் ஏது

பிரிவினை சொன்னேன்

 

உடலொடு உயிரையும்

தந்தது நீதான்

அவற்றுக்குத் தேவை

அமைத்ததும் நீதான்

 

அவற்றை நிறைவேற்ற

நானுமே முயன்றால்

அதற்கு உதவுதல்

யாரெனக் கேட்டேன்

 

உன்வழி நானும்

சென்றிடும் போது

எனக்கெனத் தனியே

பொறுப்பும் ஏது

 

அதையே  நானும்

சொல்லிடும் போது

அதனை நீயும்

எப்படி மறுப்பாய்

 

இதுதான் பொறுப்பென

சொன்னது யாரு

அதற்கேற்ற நெறிமுறை

தந்ததும் யாரு

 

சொல்லித் தந்தாய்

கேட்டுக் கொண்டேன்

அதன்படி நானும்

செய்துமே வந்தேன்

 

குருவை மிஞ்சும்

சீடனாய் மாறும்

தன்மை என்னிடம்

கொஞ்சமும் இல்லை

 

ஆகவே சீடன்

சரியில்லை என்றால்

அதற்கு பொறுப்பு

நானுமே இல்லை

 

ஆகவே உனது

பொறுப்பை உணர்ந்து

அதற்கேற்ப செய்வதே

நமக்கு நல்லது

 

குருகுலம், 6-12-2022, 5.00 காலை

 

1462 தூக்கி விடுவாய்

ஒருநாள் போவது

யுகமாய் இருக்குது

உணர்ந்தவர் அன்றி

யாரிதைப் புரிவது

 

தூரமே நின்று

வேடிக்கைப் பார்த்தால்

உண்மையில் நடப்பது

அவருக்குத் தெரியாது

 

வேடிக்கை காட்டுறேன்

என்றுமே எண்ணி

கேலியும் செய்து

நகைக்கக் கூடும்

 

கூட்டத்தைக் கூட்டி

வேடிக்கை பார்க்க

மற்றும் பலரை

அழைத்திடக் கூடும்

 

கிட்டே வந்து

கையைத் தூக்கி

விட்டால் தானே

அவருக்குத் தெரியும்

 

வேடிக்கை மட்டுமே

பார்த்திடும் போது

நான்படும் வேதனை

எப்படிப் புரியும்

 

நல்ல வேளை

நீயுள்ளாய் எனக்கு

குழியினுள் குதித்து

தூக்கி எடுக்க

 

செயலில் காட்டி

போதிக்கும் பழக்கம்

உனக்கு மட்டும்

உள்ளது தானே

 

எத்தனை முறை

தூக்கியே விட்டாய்

இப்போதும் நிச்சயம்

தூக்கி விடுவாய்

 

அந்த நம்பிக்கை

இருப்பதினாலே

அடிமையும் வாழ்கிறேன்

நானும் உன்னிலே

 

7-12-2022, 3.30 a.m

 

1463 எதிர்பார்ப்பு பொது

 

உன் எதிர்பார்ப்பு

நடக்கும் போது

என் எதிர்பார்ப்பு

நடக்குதா சொல்லு

 

எதிர்பார்ப்பு பொதுவாக

இருந்திடும் போது

ஏனிந்த முரண்பாடு

நீயதைக் கூறு

 

என்னதான் உனது

எதிர்பார்ப் பென்பது

இறைவனின் எதிர்பார்ப்பு

என்றுமே ஆனாலும்

 

அதுபோல் தானே

மனிதர்க்கும் ஆனது

அதைநீ மறுப்பது

நியாயமா கூறு

 

உன்தன்மைக் கேற்ப

நீஎதிர் பார்க்கிறாய்

என்தன்மைக் கேற்ப

நான்னெதிர் பார்க்கிறேன்

 

எந்தன்மை உனக்கு

புரிந்தது போல

உன்தன்மை எனக்கு

புரியுமா கூறு

 

ஆனால் பாவம்

நீயெங்கு அறிவாய்

பக்தனின் எதிர்பாப்பு

என்ன என்பது

 

ஆகவே நானும்

சொல்வதைக் கேட்டு

அதை நிறைவேற்று

அதுமட்டும் போதும்

 

சத்தியமாக உன்

சித்தத்தை மீறும்

ஒன்றையும் நானும்

கேட்கவே மாட்டேன்

 

சித்தத்தை அடக்கி

பக்தியில் திளைக்கும்

வரமது ஒன்றை

நானுமே கேட்டேன்

 

அதற்கு இடயூறாய்

வந்திடும் செயல்களை

நீக்கிட எதிர்பார்த்து

உன்னிடம் வந்தேன்

 

இதுகூட அதிகம்

எனநீ நினைத்தால்

இனிமேல் நானும்

வேறென்ன செய்வேன்

 

நடப்பது நடக்கட்டும்

என்றுமே எண்ணி

விதிமீது பாரத்தை

நானுமே போடவா

 

அல்லது உன்மீது

என்பாரம் வைத்து

நீசெய்ய வேண்டி

நான்னெதிர் பார்க்கவா

 

என்னதான் இதற்கு

உன்விடை என்று

நான் எதிர்பார்த்து

காத்து கிடப்பதா

 

குருகுலம், 10-12-2022, 1.00 a.m.

 

 

I won't bombard any more messages on this topic except the final message of confirmation.  Of course I will respond to those messages that come after that.  Thanks for your prayers and support.  God bless you.

 

1464 You are bestowing

 

When you bestow

Who can prevent it

Even if I try, is it possible

Tell that to me

 

Even if some stumbling

Comes in this

There would be some reason

I know that

 

Whatever might be

The human efforts

Though others come

And help me

 

Unless your

Will is in this

It cannot be accomplished

That I know well

 

Therefore what

Now happening is

Whether a boon or stumbling block

I don’t know

 

Whatever might be it

Why should I bother

You are enough for me

I know that well

 

Wherever you

Take me

However you

lead me

 

Your company will be there

And I will receive your grace

This is enough

What else can I say more

 

Not having any attachment

On material things

Not giving up

My attachment for you

 

Clinging your feet

Who has no attachment

I should live

Not giving up that attachment

 

There is none

To stop it

There is no place

For that in me

 

When you redeemed me

By giving bhakti

Which is greater than mukti

I realized it well

 

Who can bestow

And who can stop

Similarly how is that

Possible for me

 

When you bestow

And I receive

It is enough for me to live

Each day worshipping you

 

Gurukulam, 14-12-2022, 3.30 a.m

 

Finally it happened. But in my life several times though I received what I wanted, somehow it slipped from my hand.  Though I cannot deny my part in it, still I strongly believed that as a bhakta nothing works outside the will and protection of God.  So, through the help of my cousin, I finally managed to get one good double room accommodation with a caretaker, that too in Hosur area which I like very much for its good climate.  However it is not booked and I have to wait till the present occupant vacates at the end of January. However my cousin and his wife will go there today to see the accommodation by themselves and will insist on receiving the fixed deposit so that it won’t go to another person.  As I was meditating on all that went on this day, thinking of the way God takes care of Her bhakta I wrote this poem also borrowing from Thirukkural about clinging to the feet of God never give up that attachment.

Regarding bhakti greater than Mukti Goswami Tulsidas says, God might give mukti to all but She will bhakti rarely to few.

 

1464 நீ தருகிறாய்

 

நீதரும் போது

தடுப்பவர் யாரு

நானே முனையினும்

நடக்குமா கூறு

 

ஆயினும் இதிலும்

தடையேதும் வந்தால்

அதற்கும் காரணம்

இருந்திடும் பாரு

 

மனித எத்தனம்

எது வானாலும்

மற்றவர் வந்து

உதவி செய்தாலும்

 

சித்தம் உனது

இல்லாது போனால்

சாத்தியப் படாது

என்பதை அறிவேன்

 

ஆகவே இப்போ

நடப்பது கூட

வரமா தடையா

என்பதை அறியேன்

 

எது வானாலும்

எனக்குமே என்ன

எனக்கு நீபோதும்

நானதை அறிவேன்

 

எங்கே என்னை

எடுத்துச் சென்றாலும்

எப்படி என்னை

நடத்திச் சென்றாலும்

 

உன்துணை இருக்கும்

உன்னருள் கிடைக்கும்

அதுவே போதும்

வேறென்ன சொல்வேன்

 

இடம் பொருள்மீது

பற்று இல்லாமல்

உன்னை பற்றும்

பற்று விடாமல்

 

பற்றற்ற உனது

பாதத்தைப் பற்றி

அப்பற்றை விடாது

இருந்திட வேண்டும்

 

அதனை தடுப்பவர்

எவருமே இல்லை

என்னிடம் அதற்கு

இடமே இல்லை

 

முக்தியும் மேலான

பக்தியைத் தந்து

உய்த்த போதே

நானதை உணர்ந்தேன்

 

கொடுக்க தடுக்க

எவருக்கு முடியும்

அதுபோல் என்னால்

எப்படி முடியும்

 

நீதர நான்பெறும்

உறவு போதும்

நாளும் தொழுது

வாழ்ந்தால் போதும்

 

குருகுலம், 14-12-2022, 3.30 a.m

 

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

பற்றுக பற்று விடற்க—குறள்

 

Song 1465 Posted in FB on 11-2-2023

 

I don’t understand how anyone can write a poem sitting next to a corps, particularly of someone very dear to you.  But that I did in the early morning when I was sitting next to the body of my mother the whole night.  Others [some of my shishyas came for the annual meetings, my sister, and few others] went to bed.  But as I was sitting next to my mother and recalling our life together, I wrote this song pouring down my heart.

[English translation follows Tamil version]. For songs see in Face book documents under Songs written for Amma.


No comments: