1456-1460
1456 நன்றிகள் கோடி
ஆயிரம் சோதனை
ஆயிரம் வேதனை
அனைத்தையும் கடந்து
உன்னிடம் வந்து
துதித்துப் பாடிட
அருளைத் தந்து
தினம் தினமுன்னை
தொழுதிட வைத்தாய்
கருவில் இருந்து
கல்லறை வரையில்
வந்திடும் சோதனை
எண்ணிடப் போமோ
ஆயும் நீசெய்த
நன்மை அனைத்தையும்
எண்ணிட என்னிடம்
எண்களும் உண்டோ
எதிர் மறையாக
எண்ணிட வென்று
ஆயிரம் ஆயிரம்
காரியம் உண்டு
ஆனால் உன்னிடம்
வந்திடும் போது
நேர்மறையாக
மாறிடும் நன்று
சோகத்தில் திளைக்க
சோம்பிக் கிடக்க
ஆயிரம் எண்ணம்
மனதிடம் உண்டு
அந்த மனதையும்
மாற்றிடும் வல்லமை
ஐயனே உனக்கு
நிச்சயம் உண்டு
ஒருநொடி உன்னை
உள்ளத்தில் நினைக்க
என்னிலே தோன்றும்
எழுச்சி எத்தனை
அந்த நேரம்
வந்திடும் பரவசம்
அதிலே மூழ்கி
திளைக்கும் போது
எனக்கென நீயும்
படைத்த உலகும்
அதிலே வாழ
தந்த வாழ்வும்
நல்லது என்று
நாவுமே சொல்ல
நானுனைப் பாடிட
அதிலே மகிழ
தந்த அருளுக்கு
நன்றிகள் கோடி
சொல்லிட வந்தேன்
திருவடி தேடி
குருகுலம், 3-12-2022, இரவு, 2.30 a.m.
1457 தந்தால் நல்லது
சொன்னால் கேட்கேன்
என்றுமே சொன்னால்
சொல்லிடத் தேவை
எனக்குமே ஏது
கேட்பதைத் தந்திட
நீயுமே மறுத்தால்
கேட்டிடத் தேவை
எனக்குமே ஏது
வள்ளளைப் போல
வாக்குகள் எத்தனை
தந்தாய் நீயும்
என்பதை எண்ணி
அவற்றை நம்பி
உன்னிடம் வந்தால்
ஆயிரம் சாக்குகள்
சொல்வதும் எதற்கு
வாக்குகள் தருவாய்
என்றுமே எண்ணி
உன்னிடம் நானும்
வந்திட வில்லை
கேளாமல் தந்தபின்
நிறைவேற்ற மறுத்தால்
கேள்விகள் கேட்பதில்
தவறுமே இல்லை
தருவதோ மறுப்பதோ
உனக்குள்ள உரிமை
அதையே நானும்
தடுக்கவும் இல்லை
பதில்தர மறுத்து
பிடிவாதம் பிடித்தால்
அதுபற்றிக் கூட
கவலையும் இல்லை
உனக்கெது சரியோ
நீயதைச் செய்வாய்
அதுவும் எனக்கு
தெரியாமல் இல்லை
உனக்குள்ள உரிமைகள்
எத்தனை உண்டோ
அத்தனை உரிமை
எனக்கும் இருக்கு
அவரவர் உரிமையைப்
பற்றிப் பேசிட
நேரம் இதுவா
என்பதைச் சொல்லு
அதற்கும் பதிலேதும்
வராது என்றால்
சொல்வதையாவது
கேட்டுக் கொள்ளு
ஏதேனும் தருணம்
உன்மனம் இரங்கும்
அப்போது என்னை
நினைவு கொள்ளு
அதுவரை நானும்
பொறுமையாய் இருப்பேன்
அதையேனும் நீயும்
கவனத்தில் கொள்ளு
அந்த பொறுமைக்கு
உள்ள பலனில்
சற்று இப்போதே
தந்தால் நல்லது
குருகுலம், 4-12-2022, இரவு, 3.30 a.m
1458 You gave the call
I know that
This is my call
How I will
Ever miss it
When one can
Get this rarely
I will enjoy it
Completely
Calling to remain
To live in solitude
Making me to sit
At your feet
You shared
One secret
Which none has
Ever heard before
I know that
It is a great secret
But I forgot to enjoy it
Completely
Drowning in the bliss
That I received
I completely
Forgot me
Though there are
Many to do bhakti
Though they remain
Great in their bhakti
Calling me
Who is good for nothing
What a wonderful opportunity
You gave to me
When you called me
Very near to you
When you are
Very near to me
Whichever secret
You might share
I cannot
Understand them
How are you going
To understand this secret
You missed it as you
Remain as God
Poor indeed are you
As you missed this
Opportunity to remain
As a bhakta
When this opportunity
Is available, I would say that
Great indeed is this
Birth as human
Many bhaktas have
Told the same
They praised this
Divine call
Giving this
Blessed status
Which will remain both
Here and hereafter
You gave this
Opportunity to do bhakti
And gave this call
To remain as a bhakta
Gurukulam, 4-12-2022, 4.00, a.m.
As I take care of my mother I
have to wake up the whole night to help her to get up from the bed to use the
restroom. Several times, after 3.00, even though I cannot sleep, I used to lay
down on my bed. So I went to lay down, but unable to catch the sleep as I was
tossing on my bed, then I began to think about the present life and what are
the challenges and blessings that I receive simultaneously.
I am living in a place which I like very much—away
from all kinds of noises, situated near the forest. No
artificial sound and best climate in December. Good books to read with deep
subjects [Eric Lott: Vedantic
Approaches to God, Macmillan Press Let, London, 1980
Daniel O’Connor, The Testimony of C F
Andrews, CLS, Madras, 1974 and Richard B. Hays, Echoes of Scripture in
the Letters of Paul {particular in Romans], London, Yale University Press,
1989], having special tea with ginger [or strong filter coffee] and biscuits to
much [that too onion biscuit], opportunity to serve mother who deserves it and
doing my favorite hobby of doing cross stitch work [that too a log carpet using
balance threads from other works which might take several years to complete],
above all to do bhakti to the Lord who gave such a wonderful call to remain as
His bhakta [the bliss which even He does not know]. Then unable to lay
down I got up and went to my study room and wrote this song within five minutes
so not to miss such a call which He gave to me who never deserves such a life.
Saint Manikkavasagar in his Tiruvasagam talks
about the same experience in which he says, : The human life is needed Good one
on this earth if one can see the arching brows, gentle smile on your red lips;
flowing matted hair; holy ash on your body that looks red like coral; the sweet
gently lifted leg. [free translation by me]. I share the youtube for those who
can understand Tamil.
1458 அழைப்பு தந்தாய்
எனக்கான வாய்ப்பு
இதுவென அறிவேன்
எப்படி அதனை
நழுவ விடுவேன்
அரிதாக ஒருமுறை
கிடைக்கும் போது
முழுதாய் அதையும்
நிறைவேற்றிக் கொள்வேன்
தனித்து இருக்க
நீயுமே அழைத்து
தாளின் அருகே
அமர வைத்து
இதுவரை ஒருவரும்
கேட்டிருக்காத
உன்னத ரகசியம்
ஒன்றை சொன்னாய்
ரகசியம் பெரிது
நானதை அறிவேன்
முழுதாக ரசிக்க
நானும் மறந்தேன்
அழைத்த போது
கொண்ட பரவசம்
அதனுள் முழ்கி
மற்றதை மறந்தேன்
பக்தி செய்ய
பலர் இருந்தாலும்
பக்தியில் அவரும்
சிறந் திருந்தாலும்
எதற்கும் உதவா
என்னையும் அழைது
எத்தனை அறிய
வாய்ப்பினைத் தந்தாய்
அருகினில் என்னை
அழைத்த போது
அருகினில் நீயும்
இருக்கும் போது
எந்த இரகசியம்
நீ சொன்னாலும்
எனக்கு ஏதும்
புரிந்திருக்காது
இந்த இரகசியம்
நீயெங்கு அறிவாய்
இறைவனாய் இருப்பதால்
நீயதை இழந்தாய்
பக்தனாய் இருக்கும்
பேற்றினை பாவம்
இறைவன் நீயும்
எப்படி அறிவாய்
இந்த வாய்ப்பு
இருக்கும் போது
இந்தப் பிறவியும்
நல்லது என்பேன்
பக்தர் பலரும்
இதையே சொன்னார்
பரம அழைப்பை
அவரும் புகழ்ந்தார்
இகத்திலும் பரத்திலும்
என்றும் இருக்கும்
இந்த வாய்ப்பை
எனக்குத் தந்து
பக்தி செய்யும்
பேறு தந்தாய்
பக்தனாய் வாழ
அழைப்பு தந்தாய்
குருகுலம், 4-12-2022,
காலை 4,00
குனித்த புருவமும்
கொவ்ழைச் செவ்வாயில்
குமிழ் சிரிப்பும்
பணித்த சடையும்
பவளம்போல் மேனியில்
பால் வெண்ணீறும்
இனித்த முடன்
எடுத்த பொற்பாதமும் காணின்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இம்மாநிலத்தே
1459 நிறைவு காண்பேன்
என்குணம் மாறாது
இதைநீ அறிவாய்
என்னிலை அதனை
நீயும் புரிவாய்
அதற்கு ஏற்ப
என்னை நடத்தி
எப்படியோ கரை
ஏற்றியும் விடுவாய்
எனது வாழ்வு
எனதாய் இல்லை
முழுதாய் அதைநீ
ஆளவும் இல்லை
பலரது குறுக்கீடு
அதிலே உள்ளது
அவரது தேவையும்
அதிலே இருப்பதால்
தட்டிக் கழிக்க
இயலாது என்னால்
அவருக்கு என்சேவை
தேவை உள்ளதால்
எனக்கென வாழ
எண்ணமே இல்லை
உனக்கென வாழ்வும்
முடியவும் இல்லை
பிறர்க்காய் வாழ்வதே
உனக்காய் வாழ்வது
என்பதே உனது
நீதியும் ஆனது
அதையே இதுவரை
நானும் செய்தேன்
நீயும் அதன்படி
நடத்தியும் வைத்தாய்
எஞ்சிய வாழ்வும்
இதுபோல் இருக்கும்
என்றே நீயும்
சொல்லியும் விட்டாய்
இதுதான் உனது
சித்தம் என்றால்
அதன்படி செய்ய
சம்மதம் தந்தேன்
அதிலே உனது
ஆளுகை இருந்தால்
அதுவே போதும்
என்றும் சொன்னேன்
எனவே என்குணம்
எப்படி இருந்தும்
உனது குணமே
என்னையும் ஆள
உனதாய் அதுவும்
இருந்தால் போதும்
அதிலே நிறைவை
நானும் காண்பேன்
குருகுலம், 5-12-2022, 1.30 am.
1460 உன்செயல் நடக்கும்
எத்தனை முறையே
எண்ணிய போதும்
எத்தனை வகையில்
யோசித்த போதும்
சித்தம் உனது
மட்டுமே நடக்கும்
பட்ட அறிவால்
நானுமே சொன்னேன்
எனது யோசனை
நல்லதே என்று
எப்படி உன்னிடம்
எடுத்துரைத்தாலும்
என்னதான் நீயும்
கேட்டுக் கொண்டாலும்
இறுதி முடிவு
உனதாய் இருக்கும்
என்தேவை அதனை
நானுமே எண்ணி
அதற்கு ஏற்ப
யோசனைப் பண்ணி
பிறரும் அதையே
ஏற்றிட வேண்டி
பக்குவமாய் நான்
எடுத்து சொல்லியும்
என்வழி என்னை
போகவும் விட்டு
அதற்கேற்ப பிறரை
ஆடவும் விட்டு
சாதகம் எனக்கு
செய்வது போல
பாவனை பலமுறை
நீயுமே செய்தாய்
என்தேவை மீறி
பிறர்தேவை எண்ணி
அதற்கேற்ப காரியம்
முடிவுநீ பண்ணி
முன்பாக என்னிடம்
எதையும் சொல்லாமல்
செயலிலே செய்து
நீயும் காட்டுவாய்
அப்போது உன்மீது
கோபமும் கொண்டு
உனக்கு எதிராய்
வாதங்கள் செய்து
கண்ணீர் சிந்தி
கதறியே அழுதாலும்
காரியம் சாதிக்க
நானுமே முயன்றாலும்
கோபமும் குறைய
ஆத்திரம் அடங்க
கதறி அழுது
கத்தி தீர்த்தபின்
பொறுமையாய் எனக்கு
எடுத்துக் கூறி
மந்த புத்திக்கும்
புரிய வைத்து
இதுபோல் முன்பு
பலமுறை நடந்தது
இப்போதும் அதுதான்
மீண்டும் நடக்குது
என்று சொல்லி
இசைய வைத்து
ஏற்றதை மட்டுமே
நீயும் செய்வாய்
ஆகவே எப்படி
எண்ணி செய்யினும்
உன்செயல் மட்டுமே
எப்போதும் நடக்குது
குருகுலம், 6-12-2022, 4.30 am
No comments:
Post a Comment