1476 to 1480
1476
எதிர்பார்த்த
ஒன்று
இது வென்றாலும்
எப்படி இதயம்
இதையும்
தாங்கிடும்
நொந்து நம்மை
பெற்றெடுத்தாளே, நாம்
நோகமல் நம்மை
காத்து வந்தாளே
சுமைகள் நமக்காக
பல சுமந்தாளே
துன்பங்கள்
பலவற்றை
தாங்கி நின்றாளே
அடித்துத்
திருத்தி
வளர்த்ததும் அவளே
அணைத்து தாங்கி
ஆதரித்தாளே
செல்லம் கொடுத்து
கெடுத்ததும் அவளே
ஆனாலும்
கண்டிப்பு
காட்ட மறவாளே
ஒன்றா இரண்டா
எத்தனை சொல்ல
அன்னைக்கு ஈடாக
யாரைதான் சொல்ல
ஒரு பேச்சுக்கு
நாம்
பலரை சொன்னாலும்
மன சாட்சிக்கு
தெரியும்
உண்மை எதுவென்று
தெய்வமே
தாயின்முன்
தோற்றிடும் போது
பாடுள்ள
மாந்தரின்
நிலையென் னாவது
அன்னையா தெய்வமா
என்கின்ற வாதம்
இடையிலே தேவை
இல்லாத ஒன்று
எங்கும் நிறைந்த
இறைவனே ஆயினும்
அன்னையின்
வடிவிலே
காட்சியும்
தருகிறான்
தாயும் ஆனவன்
என்றபெயர் கொண்டு
தாயிடம் தங்கியே
ஆளுகை செய்கிறான்
அவளுடல் ஒருநாள்
போனபின்னாலும்
அன்புக்கு அவளையே
அடையாளம்
காட்டுறான்
இத்தனை
சிறப்புகள்
பெற்றநம் அன்னை
போனதை எப்படித்
தாங்கிடும் இதயம்
ஆனாலும் தேறிட
அருளுமேத்
தருவான்
அன்னையின்
நினைவாலே
ஆறுதல் தருவான்
சுவாமிமலை, 8-1-2023
(9-1-2023), இரவு 12.10
1477 உறவில் வாழ்கிறாய்
எனக்கிது
இழப்பாய்
இருந்த போதும்
உனக்கது விடுதலை
தந்தது என்றால்
எனக்கது போதும்
வேறென்ன வேண்டும்
எங்கோ இருந்து
நீவாழ வேண்டும்
உயிருக்கு உடலைத்
தந்த இறைவன்
இரண்டையும் இப்போ
ஏனோ பிரித்தான்
பலவித காரணம்
நாம் சொன்னாலும்
படைத்தவன் அதற்கு
பதிலைத் தாரான்
உடலொடு போனது
நமது தொடர்பு
எங்குயிர் போனது
நமக்குத்
தெரியாது
ஆனால் உறவு
மட்டும் தொடருது
எதனோடு என்று
எவருக்கும்
தெரியாது
பெற்றோர் பிள்ளை
உடன்பிறப் பென்று
சொந்தம் பந்தம்
சூழ வாழ்வது
இறைவனே அமைத்த
நியதி என்பதால்
இந்த உறவு
இறந்தும் தொடருது
கொடுத்ததை
எடுத்தான்
தடுக்க முடியாது
உறவை அளித்தான்
பிரிக்க முடியாது
அளித்ததைக்
காத்து
எடுத்ததை ஏற்று
வாழ்வது ஒன்றே
நமக்கு ஏற்றது
ஆகவே அம்மா
நீயும்
இருக்கிறாய்
அன்னை என்ற
உறவில்
வாழ்கிறாய்
மீண்டும் காணும்
வாய்ப்பற்றுப்
போயினும்
நிரந்தரமாக இந்த
உறவில் இருப்பாய்
குருகுலம், 13-1-2023, காலை 5.15
1478 Both became mad
Once we both
Became mad
Who has to give treatment
To whom
I babble like a
Mad person
As intoxicated
With bhakti
As you too
Get trapped in the net of bhakti
You are lamenting
Seeing my condition
As I lament
Thinking about my mother
You became sad
Thinking about my condition
Who has to give
Comfort to whom
And how we both live
By encouraging each other
You know well that
If you bestow bhakti
This alone
Will happen
Keeping bhakti
Above buddhi
You made the buddhi
To be under the control of bhakti
Bhakti won’t deny
What buddhi says
Buddhi won’t reject
What bhakti does
If both join together
And began to act like this
What else will happen
Other than becoming mad
Fortunately as
Both our condition
Became
The same now
As I listen to you
And you listening me
We both understood
Each other’s mind
It is better to live
In this condition for sometime
As it is
Good for both of us
As others keep away from us
Seeing our condition
We both can live
Without disturbed by others
If this became
The permanent condition for us
Then we both can
Become mad [persons]
Gurukulam, 16-1-2023, 8.00 p.m.
Others might think that I am
going overboard and still continue to cry for my mothers. It is not mere
emotional attachment but an umbilical relationship that makes me cry, often
thinking about my mother as I miss her very much. But as the Lord is
there to understand He too joins me in this madness as He gets trapped in the
net of bhakti. So after crying for sometimes when I began to pour down my
heart I wrote this song expressing my present condition.
1478 இருவரும் பைத்தியம்
இருவரும்
பைத்தியம்
என்றான பின்னே
யாருக்கு யார்
வைத்தியம்
பார்ப்பது
பக்தியின்
பைத்தியம்
தலைக்குமே ஏற
பித்தனைப் போலவே
பிதற்றுறேன்
நானும்
பக்தியின்
வலையிலே
அகப்பட்டதாலே
என்னிலை கண்டு
புலம்புறாய்
நீயும்
தாயை எண்ணி
நானுமே புலம்ப
என்னிலை எண்ணி
நீயுமே வருந்த
யாருக்கு யார்
ஆறுதல் சொல்வது
எவர்தேற்ற
எவராற்ற
இருவரும் வாழ்வது
பக்தியை தந்தால்
இதுபோல் நடக்கும்
என்பதும் உனக்கு
நன்குமேத்
தெரிந்தும்
புத்தியின் மேலாக
பக்தியை வைத்து
புத்தியை
பக்திக்கு
ஆட்பட வைத்தாய்
புத்தி சொல்வதை
பக்தி மறுக்காது
பக்தி செய்வதை
புத்தி ஒதுக்காது
இரண்டும் இணைந்து
இப்படிச்
செய்தால்
பைத்தியம்
பிடிக்காது
வேறென்ன ஆவது
நல்ல வேளை
இருவரின்
நிலையும்
இப்போது ஒன்றாக
இருந்திடும் போது
நீசொல்ல
நான்கேட்க
நான்சொல்ல
நீகேட்க
இருவரின் மனதும்
ஒருவாறு
புரிந்தது
இந்த நிலையிலே
சிலகாலம் வாழ்வது
உனக்கும்
எனக்கும்
மிகமிக நல்லது
இருவரின்
நிலைகண்டு
பிறருமே ஒதுங்க
எவ்வித இடையூறும்
இன்றியே வாழலாம்
இதுவே நிரந்தரம்
என்றுமே ஆனால்
பைத்தியம் ஆகவே
நாமும் மாறலாம்
குருகுலம் 16-1-2023, மாலை, 8.00
1479 உனது பொறுப்பு
இந்த வாழ்வு
நீதந்த ஒன்று
இதனை எப்படி
வாழணும் என்று
சொல்லித் தந்து
வாழ வைப்பாய்
துணையாய் நீயும்
வாழ வருவாய்
என்மனம் ஒன்று
சொல்லிய போதும்
எனக்கெது நல்லது
என்பது தெரியாது
உன்மனம் என்ன
எண்ணுது என்று
எனக்கு என்றும்
நிச்சயம் புரியாது
இன்றைய வாழ்வு
போனது நன்று
நாளைய வாழ்வும்
உனது என்று
வாழ மட்டும்
எனக்குத்
தெரியும்
வாழ வைக்கும்
உனக்குப்
புரியும்
ஆகவே நாளைய
வாழ்வு பற்றி
எதற்காக நான்
இன்றே எண்ணணும்
இன்றுபோல் நாளை
சென்றிட வேண்டும்
என்று மட்டும்
வேண்டிட வேண்டும்
அந்த கவலையும்
உனதுமே ஆச்சு
அதுபற்றி எனக்கு
இனியென்ன பேச்சு
ஒவ்வொரு நாளும்
நீதரும் வாழ்வை
வாழ்ந்து
முடிப்பதே
என்கடன் ஆச்சு
அந்த பணியை
இன்று செய்து
நாளை வாழ
ஆயத்தம் செய்து
தூங்க நான்
போகும் முன்னே
நன்றி சொல்ல
உன்முன் வந்தேன்
மீண்டும் நாளை
வாழ்வு தந்தால்
முடிந்த மட்டும்
வாழ்ந்து
முடிப்பேன்
இன்று இரவே
என்னை அழைத்தால்
நன்றி கூறி
வந்து சேர்வேன்
இதுவே எனது
இறுதி பாடல்
என்று இருந்தால்
மிகவும் நல்லது
மீண்டும் பாடல்
எழுத வைத்தால்
முழுக்க முழுக்க
உனது பொறுப்பு
குருகுலம், 23-1-2023,
இரவு 11.15
As my mother has gone I began to think what will
happen to my future life, particularly, if God allows me to live long
enough. As I began to imagine about
various possibilities I cannot come to one conclusion. Of course I always believe living ‘one day at
time’ and though not anxious about my future, still the thought about future
life I cannot avoid. However after
thinking various options when I sat calmly I wrote this poem as my prayer to the
Lord as it is His responsibility I need not even think or plan about my future
but has to live as per my principle of ‘one day at time’.
1480 வலி வேண்டும்
நாலு வாரம்
ஓடிப் போச்சு
நாளும் பொழுதும்
பறந்து போச்சு
ஆயினும் உனது
நினைவு மட்டும்
ஆணிபோல் மனதில்
பதிந்து இருக்கு
சென்ற மாதம்
இருந்த உன்னை
இந்த மாதம்
இழந்த போதும்
அன்னை என்ற
உறவு மட்டும்
என்றும் என்னுடன்
இணைந்து இருக்கும்
தாய்சேய் உறவு
போல ஒன்று
அவனி மீது
ஏதும் இல்லை
தொப்புள் கொடியில்
தொடங்கிய உறவு
துண்டித்து செல்ல
வாய்ப்பு இல்லை
உன்னை எண்ணி
கண்ணீர் சிந்தும்
என்மனம் ஆற
வழியும் இலை
இழப்பின் வலியை
தாங்கும் வலிமை
எனக்கு ஏனோ
நீதர வில்லை
அந்த வலியில்
உன்னை மீண்டும்
உணரும் பேறு
கிடைக்கும் போது
இந்த வலியும்
எனக்கு வேண்டும்
இதிலே உன்னை
காண வேண்டும்
நாளும் பொழுதும்
ஓடிப் போகும்
காணும் உலகின்
காட்சி மாறும்
நெஞ்சம் ஒன்று
இருக்கும் மட்டும்
நினைவு மட்டும்
அதிலே இருக்கும்
அந்த நினைவு
நெஞ்சை அழுத்த
அழுது கண்ணீர்
நானும் சிந்த
இந்த தேகம்
இருக்கும் மட்டும்
உன்உறவு என்னை
தேற்றி ஆற்றும்
குருகுலம், 23-1-2023, இரவு
11.50 pm.
When I think about my mother some kind of burden pressing my heart and I
began to shed tears immediately. Particularly as my mother passed away exactly
four weeks before and I was sitting next to her body whole night often crying,
as I recalled the incident [as I live and sleep in the same room also now]
unable to control me I began to cry loudly.
Fortunately I am alone and there is neighbors to me. So I have the
freedom to cry loudly. Though I retired
to bed, unable to sleep I got up and wrote this poem to pour down my heart that
one way this pain is also good for me as it is working as a healing therephy.
No comments:
Post a Comment