1451 1455
1451 பிரியா உறவு
தேடிப்பார்த்து கண்டவர்
உண்டு
நாடிப் பார்த்து அடைந்தவர்
உண்டு
கேட்டு அதன்பின் பெற்றவர்
உண்டு
விதிவிலகிதிலே எனக்குத்தான்
உண்டு
தேடிச் சென்றது உண்மை
எனினும்
நிச்சயம் உன்னைத் தேடவே
இல்லை
நாடி பலவழி நான் சென்ற
போதும்
உன்னை நாடிடும் வாய்ப்பு
வரலை
கேட்டேன் பலரிடம் பெற்றிட
வேண்டி
உன்னிடம் கேட்க எண்ணமே
வரவில்லை
ஆனால் உன்னை நானும்
அடைந்தேன்
அதுதான் எனக்கு இன்னும்
புரியலை
இரக்கம் என்று இதனைத்
சொல்வதா
கருணை என்று எண்ணிக்
கொள்வதா
வலிய வந்து ஆட்கொண்டதாலே
கிருபை என்று இதனை அழைப்பதா
எப்படி அழைத்தாலும் எண்ணிப்
பார்த்தால்
இவற்றைத் தாண்டி ஒன்று
உள்ளது
படைக்கும் முன்னே இருந்த
உறவை
இடையில் நானும் இழந்த
போதும்
உனதை உனக்காய் மீட்டுக்
கொள்ள
விரைந்து என்னைத் தேடியே
வந்து
வலியவந்து ஆட்கொண்ட ஒன்றை
விவரித்துச் சொல்ல வார்த்தை
இல்லை
அந்த உறவில் நானும்
மகிழ்ந்து
ஐயனே உன்னுடன் இரண்டறக்
கலந்து
இனிமேல் ஏதும் பிரிக்க இயலா
உறவு கொண்டு நாளும்
வாழ்வேன்
குருகுலம், 29-11-2022 3.00 am.
One
question was asked by a bhakta to me: is there anything you can give light
inters of Good News?
Though
I gave my regular answer, still for me The Good News is restoring back the last
relationship that I have last. Of course sin, salvation, redemption are part of
the Good News. But as a bhakta it is
more than this theological terms and understanding but celebrating the eternal
relationship with God.
1452
இனியொரு
முடிவுக்கு
நாமுமே
வரணும்
எதற்காக
கைநழுவி
காரியம்
செல்லணும்
என்னதான்
உரிமை
உனக்
கிருந்தாலும்
என்பேச்சை
நீயும்
கேட்கத்தான்
வேண்டும்
தனித்து
இருக்கவா
எங்களைப்
படைத்தாய்
தனித்து
செய்யவா
உலகினை
சமைத்தாய்
பிரியாத
உறவொன்று
இருகின்ற
போது
பிரிக்கின்ற
செயலுக்கு
இடமேன்
தந்தாய்
தனித்து
யோசித்து
முடிவும்
செய்ய
தனியொரு
உலகினை
இனிதான்
படைக்கணும்
என்னுடன்
இந்த
உலகில்
இருந்தால்
என்னையும்
கேட்டு
முடிவு
எடுக்கணும்
பொதுவாய்
உள்ள
காரியம்
எதிலும்
உனது
உரிமையில்
தலையிட
மாட்டேன்
என்வரை
என்று
வந்திடும்
போது
எனது
உரிமையை
விட்டிட
மாட்டேன்
இதுவும்
நீயாய்த்
தந்தது
தானே
இப்போ
மறுத்தால்
அதை
ஏற்கேனே
உரிமை
என்று
வந்து
விட்டாலோ
உனது
பேச்சையும்
கேட்க
மாட்டேனே
என்
பிடிவாதம்
தெரிந்த
பின்னாலே
இறங்கி
நீதான்
வந்திட
வேண்டும்
அடம்
பிடித்து
அழுதிடும்
போது
தாய்போல்
நீயும்
மாறிட
வேண்டும்
விட்டுக்
கொடுப்பது
தாயின்
இயல்பு
உன்னிடம்
அதுவோ
நிறையவே
இருக்கு
அப்புறம்
இந்த
பாரா
முகமன்
அழுதிடும்
என்னை
திரும்பித்தான்
பாரேன்
அதனை
விடுத்து
பார்க்க
மறுத்தால்
அடமும்
தொடரும்
அதையுமே
சொன்னேன்
குருகுலம், 30-11-2022, 3.00
For
me salvation is not merely about sin and forgiveness or redemption and
regeneration. But it is restoring back
the last relationship of the atman with Brahman. But what kind of that
relationship of the atman with Brahman [God] lead to various kinds of
philosophies in India [advaita, Vishishtadvaita and dvaita etc.]. And each
philosophy has its own way to deal with this subject. Regarding Muktiveda as we
are created in God’s Image, through mukti though we experience His presence all
the time, still we are not sharing in His essence. But what is that Image of
God in us is not clearly explained by any theology and a bhakta through her
relationship alone can experience this.
And
another relevant topic, particularly in bhakti tradition is that though God is
sovereign and Independent to do anything thing that He likes, yet when it comes
to His relationship with His bhaktas, He too need to them to enjoy that
relationship. Of course, this is a controversial subject and many theologians
in India had their own view about it.
However, in Ramanuja’s commentary about the relationship between the
atman and Brahman is very important for us to understand this. Though bit long it is worth to read the
following extraction from the book by Eric Lott: Vedantic Approaches to God,
Macmillan Press Let, London, 1980, pp. 47 ff.
Ramanuja uses various terms for this as dependence of atman on Brahman [prakaara-prakaarin],
inseparability from the supreme Self [Principal-accessory (Sesa-sesin)
relationship]; Support [aadhaara] and dependent [aadheya];
Controller [niyantr] and the controlled [niyaamya]; lordship [isitrtva]
supremacy [paratva] Inner Controller [antar-yaamin], whole
[amsin] and part [amsa] concludes:
… ‘Because of their intense love
for me, they find that it is impossible to support their souls for even an
infinitestimal part of a second without singing my praise, striving for me, and
worshipping me.’ And the dependence can
never be reciprocal, even though there will be some mutuality about the soul’s
relations to its body. ‘My existence is
not under their control…. I am the supporter of all beings; they can be of no
help to me at any time.’.{ Sri-Bhasya {on Brahma-Sutras} (Sampatkumaran, M.R., The
Gita-Bhasya of Ramanuja, a trans., Madras, 1969 9.4-5, 14}
And
yet, following the Gita’s own suggestion, Ramanuja describes a remarkable
change in the Lord’s attitude towards his dependants, when their devotion is so
intense that they feel ‘unable to sustain their souls without worshipping me,
and when this worship is their sole aim’.
For in such cases, even the Support feels that ‘without him [that devoted
soul], I cannot sustain my soul’; ‘I treat the as if they were my superiors’.{cf.
Gita-Bhasya, 7.18; 9.29} Clearly this is
not an ontological statement on Ramanuja’s part, though it does have
considerable theological significance.—p. 52
1453 ஒன்று தெரியும்
எனக்குத்
தெரியலை
ஏனோ
புரியலை
எது
நடந்தாலும்
பொறுப்பு
நானில்லை
தட்டிக்
கழித்திட
இதையும்
சொல்லலை
தந்த
பொறுப்பை
நிறைவேற்ற
மறுக்கலை
ஆயினும்
காரியம்
கைமீறும்
போது
அதற்குக்
காரணம்
நிச்சயம்
நானில்லை
என்எல்லை
அறிவேன்
என்தன்மை
புரிந்தேன்
அதனால்தான்
நான்
இதனைச்
சொன்னேன்
சுமந்திட
மறுக்கலை
சுமத்திடும்
போது
தப்பிக்க
நினைக்கலை
நீதரும்
போது
சொல்ல
வருவது
புரியுதா
உனக்கு
சுத்தமாய்
ஏதும்
புரியலை
எனக்கு
ஏதோ
ஒன்று
இடறுது
நெஞ்சில்
என்ன
வென்று
சொல்லிடத்
தெரியலை
அனுதினப்
புலம்பல்
இதுவும்
ஒன்று
என்று
மட்டும்
எண்ணி
விடாதே
ஒரு
நாளேனும்
புலம்பா
வாறு
ஏனோ
வாழ்க்கை
போகவும்
இல்லை
தவறு
எனதாய்
இருந்த
போதும்
தாங்கிடத்
தெம்பு
இனிமேல்
இல்லை
இத்தனை
சொல்லியும்
புரியா
திருந்தால்
இதற்கும்
மேலே
சொல்லிட
வழியில்லை
ஆனால்
ஒன்று
நிச்சயம்
தெரியும்
அதைத்தான்
இப்போ
மீண்டும்
செய்யணும்
தெரிந்தால்
புரிந்தால்
எதை
செய்வேனோ
அதையே
நானும்
இப்போ
செய்யணும்
காக்க
நீயும்
இருக்கும்
போது
காரியம்
ஏதும்
கை
மீறாது
காப்பேன்
என்று
தந்த
வாக்கும்
நிச்சயம்
காக்கும்
ஆறவே
மாறாது
குருகுலம், 1-1-2022, 1.30 a.m.
As my mother’s condition is slowly detoriating I have to
look after her more than before. Almost
no sleep whole night. This also affects my health a lot. Though my sister tries
her best to shift our mother to Chennai, still the house is not available near
to her to rent till February end. So each day became a struggle for me to
survive. But the only thing that I know for sure is to pour down my heart to
the Lord knowing for sure that in spite of the situation He is there to take
care of me.
1454 பேச்சின்றி நின்றேன்
கேட்டிட வந்தும்
கேளாமல் இருந்தேன்
கேட்க வந்ததை
முற்றாக மறந்தேன்
வாட்டமும் கொண்டுநீ
வாடியே நிற்கையில்
காரணம் புரிந்தால்
வாய்மூடிக் கொண்டேன்
இணை பிரியாது
இருக்கின்ற பேறு
எனக்குநீ தந்துமே
கணநேரம் மறந்து
உலகினில் ஓடியே
உன்னையும் இழந்தேன்
உன்னுள்ளம் வாடிடும்
என்பதை மறந்தேன்
துரிதமாகத் திரும்பி
வருவேன் என்று
சொன்னதைக் கூட
முற்றாக மறந்து
என்னேவல் செய்யும்
வேலையாள் போல
எண்ணியே நானும்
உன்னிடம் நடந்தேன்
பிரிவு சுடுமென
தெரிந்த போதும்
இருவர்க்கும் பொதுவது
என்பதை மறந்தேன்
அதன்வலி அறிந்து
உன்னையும் முனிந்து
பலமுறை நானும்
என்னமாய்ப் பேசினேன்
சுயநலம் கொண்டு
நானுமேத் திரிய
உன்முகம் தோன்றி
என்னிலே மறைய
ஆகவே விரைந்து
ஓடியே வந்து
என்செயல் எண்ணி
என்னையும் நொந்து
ஏறிட்டுப் பார்க்க
அச்சமும் கொண்டு
ஏதும் பேசாமல்
மவுனியாய் ஆனேன்
நானின்றி நீயும்
தவித்துப் போனதை
எப்படிக் கேட்பது
என்பது தெரியாமல்
நாணமும் அச்சமும்
ஒருசேரக் கவ்வ
பேச்சின்றி நானும்
பேசாது நின்றேன்
முன்போல் நீயும்
மன்னித்து ஏற்க
மன்றாடி உனது
தாளிணைப் பணிந்தேன்
குருகுலம், 1-12-2022, இரவு, 2.30
Just for a change I exchanged the place of God in my place
in Viraha-bhakti as that too is part of the theme of love in separation. As I
have pointed out in the song
1455 எல்லைக்குள் வைத்தாய்
நிறமற்று குணமற்று
உருவற்று பெயரற்று
அசைவற்று அருவாக
இருந்திடும் உனக்கு
இறைவன் என்றொரு
சொல்லும் எதற்கு
என்பதே என்முன்
கேள்வியாய் இருக்கு
கடந்து நின்றதால்
கடவுள்நீ என்றால்
கடந்தது எதுவெனப்
புரியவே இல்லை
எல்லைகள் உள்ளது
எமக்குமே கடக்க
கடந்திட உனக்கெந்த
எல்லையும் இருக்கு
இப்படித்தான் உன்னை
அறியணும் என்றால்
இத்தனை மறைகள்
தத்துவம் எதற்கு
அறிவுக்கும் உணர்வுக்கும்
அப்பாலே இருந்தால்
அவைகொண்டு உன்னை
எப்படித் தேட
அந்நிலை சென்று
திரும்பியே வந்தால்
அங்கே நடந்ததை
எப்படிச் சொல்ல
நல்ல வேளை
நான் தேடும்போது
கடந்து நிற்காமல்
கடிந்துமே வந்தாய்
உணர்விலே கலந்து
உறவாடி மகிழ்ந்து
அறிவுக்கும் கூட
புரிந்திட வைத்தாய்
எண்ணிலா மறைகள்
எத்தனை சொன்னாலும்
என்னுளம் உணர
என்னிடம் வந்தாய்
மறைகளின் உள்ளே
மறைந்து கிடக்கின்ற
புதிர்களை நீயும்
விடுவித்துத் தந்தாய்
தாயின் குணமுடன்
தாயென்ற பெயர்கொண்டு
சேயின் மொழியாலே
சொல்லியும் தந்தாய்
விரும்பிய உறவாக
உறவாட வரும்போது
அந்த உருக்கொண்டு
அருகினில் வந்தாய்
அவற்றுக்கு அப்பாலே
ஆன்மாவில் உனைத்தேட
அங்கே உருவன்றி
என்னுளே நிறைந்தாய்
ஆகவே குணமின்றி
உருவாகி அருவாக
எப்படி அழைத்தாலும்
என்னுள்ளே வரும்போது
எல்லைகள் கடந்து
நீநின்ற போதும்
எனது எல்லைக்குள்
உன்னையே வைத்தாய்
குருகுலம், 1-12-2022, 3.00 காலை
I am reading the book: Vedantic Approaches to God’ [Macmillan
Press Let, London, 1980] by Eric Lott. He has done a remarkable research about
this subject. And one word that he often uses to explain both the transcendence
and immenance of God ‘transcendental immanence’ is the best word to understand
the nature of God. However for me
thinking and worshiping a God standing beyond our understanding and experience
is something which is difficult to comprehend. Even He is transcendence in His
nature, still He limits Himself to have relationship with us. As I pointed in song 1452 God also not only
longs for our fellowship but similarly misses like us when there comes any kind
of separation for any reason.
Though generally I never send my Bhakti Theology songs but only post in
my blog, I was tempted to share this with you to celebrate with me this bhakti
No comments:
Post a Comment