Thursday, February 16, 2023

 1481 to 1485

1481 மிகமிகக் கடினம்

 

நான்படும் வேதனை

யாருக்குப் புரியும்

நான்கொண்ட துயரம்

யாருக்குத் தெரியும்

 

உயிரில் கலந்து

உணர்வில் இணைந்து

உறவைப் பிரிவது

மிகமிகக் கடினம்

 

சென்றவர் வாரார்

தெரியும் எனக்கு

செல்வதே நல்லது

புரியுது எனக்கு

 

ஆயினும் இந்த

உறவென்ற ஒன்று

போக மறுக்குது

புரியுதா உனக்கு

 

எங்கே உறவு

இல்லை சொல்லு

எவ்விதம் உயிரினம்

வாழ்ந்திடும் எண்ணு

 

ஒன்றில் ஒன்று

பிறக்கணும் என்று

நியதியை வைத்தது

யாரெனச் சொல்லு

 

உறவற்றுப் போனால்

உயிரினம் இருக்குமா

உறவின்றி உலகம்

இயங்கிட முடியுமா

 

துறந்த துறவிக்கு

சீடர்கள் எதற்கு

அங்கும் உறவு

தொடருது பாரு

 

எத்தனைக் கேள்விகள்

இதுவரை கேட்டார்

எவ்வளவு பதிலும்

பலரும் தந்தார்

 

கேள்வி பதிலும்

முடிந்த பின்னாலே

தன்தன் உறவை

அவரும் தொடர்ந்தார்

 

என்னிந்த வாதம்

எனக்குத்தான் பொருந்தும்

என்னுள்ளம் சொல்வது

எனக்குத்தான் புரியும்

 

கேள்வியும் எனது

பதிலும் எனது

என்பதும் அறிவுக்கு

நிச்சயம் புரியும்

 

ஆகவே இந்த

வேதனை மூலம்

அறிவுக்கு மனது

சொல்லுது பாடம்

 

ஒன்றை ஒன்று

புரிந்த பின்னாலே

வந்து சேருது

ஆறுதல் எனக்கும்

 

குருகுலம், 26-1-2023, காலை  8.15

 

Again I began to cry this morning when I sat alone for sometime. Then I began to think deeply whether I am facing some psychological problem as I find it difficult to control my tears whenever I think about my mother.  Even when I was busy with some other works, suddenly her thought comes and I began to cry. Do I need some kind of counselling or medication to overcome this emotion.  I am not sure.  But after I cried, as inspiration came I wrote this poem expressing my thought.  After writing this when I realized that even this relationship is ordained by God now the heart has to counsel the buddhi only through this pain of separation that this is not new and only happening to me.  Throughout the history and even in contemporary time several, unable to bear the separation of their beloved ones, expressed their grief through various ways.

 

 

1482 ஏதோ சொன்னேன்

 

உன்னை நானும்

மறக்காத போது

என்னை நீயும்

மறந்ததேன் கூறு

 

மனத்தால் ஒருகணம்

பிரியாத போது

என்னை விட்டு

பிரிந்ததேன் கூறு

 

‘உன்னை விட்டு

ஒருகணம் பிரியேன்

உன்னை மறந்து

நானும் இருக்கேன்

 

ஒருவரில் ஒருவர்

கலந்த பின்பு

பிரிவென்ற சொல்லுக்கு

இடமுமே ஏது’

 

சொன்னதும் நீதான்

இதை மறந்தாயோ

சொன்னதை இப்போ

நீ மறுப்பாயோ

 

காத்து கிடக்கிறேன்

தேடியே வாராயோ

கண்ணீர் இன்னும்

சிந்த வைப்ப்பாயோ

 

உன்னை எண்ணி

நெஞ்சம் உருகி

பக்தியால் கண்ணீர்

சிந்த விடாமல்

 

பிரிவென்ற துயரம்

இவ்விதம் அளித்து

கண்ணீர் சிந்த

நீயும் வைப்பாயோ

 

காதலினால் நாம்

இருவரும் இணைய

ஆனந்தம் பெருகி

கண்ணீர் சிந்த

 

மேனியில் ஒருவித

பரவசம் பரவ

பேச்சின்றி நானும்

நெகிழ்ந்து உருக

 

வாழும் வாழ்வை

நீதர வேண்டும்

அதற்கு என்னிடம்

நீ வரவேண்டும்

 

தாயும் சேயை

மறந்திடக் கூடும்

இருவரும் ஒருநாள்

பிரிந்திடக் கூடும்

 

தாயினும் மேலாய்

பாசம் கொண்ட

நீயென்னை எப்படி

மறந்திடக் கூடும்

 

என்னுளம் கொண்ட

தாபத்தினாலே

ஏதோ சொன்னேன்

நீ முனியாதே

 

பிரிவே இல்லா

உறவைத் தந்திட

நீமட்டும் என்றும்

மறந்து விடாதே

 

குருகுலம், 27-1-2023,  இரவு, 11.30.

 

As I was thinking about the separation of my mother from me, I remembered one  Tamil son by Ramalinga Vallalar.  I sang the very same song when we conducted a puja for my mother arranged by Sri Umapathy our village head here in the ashram on Jan 14th 2023.  Then I wrote this song in viraha bhava about the pain of separation if He forgets and leave me alone.

 

 

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்

பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும்

கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்

கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்

நற்ற தவத்தவர் உள்ளிருந் தோங்கும்

நமச்சிவாயத்தை நான் மறவேனே.

 

1483 எனது பரிகாரம்

 

உனக்கென ஒருதுளி

கண்ணீர் சிந்தி

உன்னை நினைத்து

மனதிற்குள் புலம்பி

 

எனக்கொரு வாழ்வை

நானும் வாழறேன்

உன் நினைவாலே

அனுதினம் வாடுறேன்

 

எனக்கென புதிதாய்

நடந்திட வில்லை

எவருக்கும் நடக்காதது

நடத்திட வில்லை

 

ஆயினும் என்மனம்

ஆறிட மறுக்குது

அம்மா உன்னை

எண்ணி தவிக்குது

 

எதுவரை இந்த

துயரும் இருக்கும்

என்பது எனக்கு

நிச்சயம் தெரியாது

 

ஆனால் உன்னை

மறப்பது என்பது

அத்தனை எளிதாய்

இனி நடக்காது

 

ஒன்றா இரண்டா

எதனைச் சொல்ல

எனக்கென நீசெய்த

தியாகங்களை எத்தனை

 

ஒவ்வொரு நாளும்

எனக்கென வாழ்ந்தாய்

இறுதியில் என்னிடம்

இருந்தே பிரிந்தாய்

 

என்னுடன் பிறந்த

மற்றவர் கூட

என்போல் உன்னை

நினைந்திடக் கூடும்

 

ஆனால் நாம்கொண்ட

உறவு மட்டும்

ஏனோ என்றும்

தனித்தே இருக்கும்

 

எவருக்கும் கிடைக்காத

வாய்ப்பு ஒன்றை

எனக்கு மட்டும்

நீயும் அளித்தாய்

 

ஆனால் நானோ

பலமுறை தவறிணும்

அனுசரித்து நீ

என்னுடன் வாழ்ந்தாய்

 

அதுபோல் மீண்டும்

வாய்ப்பு ஒன்று

எனக்கு நிச்சயம்

இனி கிடைக்காது

 

ஆகவே அதனை

நினைத்து அழுவது

அனுதினம் நடக்குது

நானென்ன செய்வது

 

இந்த துயரும்

ஒருவிதம் நல்லது

இதிலே எனது

பரிகாரம் உள்ளது

 

ஆகவே கண்ணீர்

அடிக்கடி சிந்தி

அதிலே நீதரும்

ஆறுதல் காண்பேன்

 

குருகுலம், 28-1-2023, காலை, 8.00 am

 

Generally I never light oil lamps before any deity, not only now also in the past. Like my father, I never have done any proper puja from my boyhood, though I spent time in chanting slokas, mantras and from Tamil Scriptures. My mother knows this very well and her once concern was that after she passed away there won’t be anyone to light lamp in her puja place to continue her legacy or family tradition.  So I arranged my own puja place in the very same room in which my mother stayed and died, keeping my parents photo.  Of course I also kept the brozen image of Nataraja which my mother used to keep in her puja place as He was her favourite deity. And I started to light lamp in front of the photo of my parents where I also placed the image of Nataraja.  Of course I am not worshiping any of them but in this way I pay respect to the memory of my parents and want to assure the continuity of her legacy.  I also do this for my own need and satisfaction, though I personally don’t believe in such acts of ritual. So this morning after bath when I light the oil lamp, unable to control me I began to cry.  After doing that when I sat as I cannot control my tears I wrote this poem.

 

1484 வணங்கிக் கொண்டாடு

 

தாயற்ற வாழ்வு

சீரற்று போகும்

தாயின்றி வாழ்வு

வெறுமை ஆகும்

 

ஆயிரம் உறவுகள்

வந்து போயினும்

தாயின் உறவுக்கு

மாற்றே இல்லை

 

உடலில் சுமந்து

உணர்வில் கலந்து

உள்ளம் முழுதும்

அன்பால் நிறைந்து

 

தன்னைத் துறந்து

பலசுகம் மறுத்து

தாயைப் போல

காப்பவர் யாரு

 

ஆண்டியோ அரசனோ

யாராய் ஆயினும்

தாய்க்கு அவரும்

சேயே ஆவர்

 

பேதம் அறியாள்

பிரிவினை பாராள்

சுற்றம் அனைத்தையும்

தாங்கி பிடிப்பாள்

 

பொறுமையில் பூமியை

விஞ்சியே நிற்பாள்

கருணையில் கடவுளை

காணச் செய்வாள்

 

தெய்வம் கூட

தேடிடும் உறவு

தாயன்றி வேறு

யாருண்டு கூறு

 

தாயாய் மாறி

வருவதினாலே

தெய்வம் கூட

உயரும் பாரு

 

இழந்தவர் அறிவார்

இந்த பிரிவை

இருப்பவர் அறியார்

அதனின் உயர்வை

 

இருக்கும் போதே

சேவை செய்யார்

இழந்த பின்னே

என்ன செய்வார்

 

வேறெந்த இழப்பையும்

நிரப்பிட முடியும்

தாயை இழந்தால்

வெறுமை நிலைக்கும்

 

இருக்கும் போதே

இதனை உணர்ந்து

தெய்வம் தந்த

வாய்ப்பென அறிந்து

 

தாயற்ற வாழ்வு

சீரற்று போகும்

என்பதை மட்டும்

மனதில் கொண்டு

 

போன பின்னால்

எண்ணி புலம்பாமல்

வாழும் போதே

வணங்கிக் கொண்டாடு

 

குருகுலம், 7-02-2023, காலை,  7.30

 

1485 உடனே வேண்டும்

 

யாரென்ன ஆறுதல்

சொல்கின்ற போதிலும்

நீவந்து தாராமல்

யார்தரக் கூடும்

 

நேராக நீவந்து

சொல்லிட வேண்டாம்

செஞ்சம் உணர்ந்திட

தந்தாலே போதும்

 

எவ்விதம் தருவது

என்பதும் தெரியாதா

இதுவரை நீயதை

செய்யாமல் இருந்தாயா

 

தேவை இப்போது

வேறான போதிலும்

தருவது நீயன்றி

யாராகக் கூடும்

 

நெஞ்சத்தின் தேவை

நிறையவே இருக்கு

பலவற்றை நீயுமே

நிரைவேற்ற மறுப்பதால்

 

ஏற்ற காலத்தில்

நிறைவேற்றி வைப்பேன்

என்ற காரணம்

நீயுமே தருவதால்

 

அவற்றோடு இதனையும்

இப்போது சேர்க்காதே

அவசர பிரிவினில்

இருப்பதால் சொல்கிறேன்

 

சிகிச்சையில் தாமதம்

நீயுமே செய்வதால்

விளைவுகள் வேராகும்

அதையும் நீயறியணும்

 

அதன்பின் பாரம்

யாருக்கு பெருகும்

அதையே சற்றேனும்

நீயுமே எண்ணனும்

 

நிரந்தரமாக நீ

என்னோடே தங்கி

சேவை செய்திடும்

நிலையுமே வந்திடும்

 

அதுகூட ஒருவிதம்

எனக்குமே நல்லது

ஆனால் உன்பாடு

எத்தனைப் பெருகும்

 

வேறெங்கும் செல்லாமல்

என்னோடே தங்கினால்

உன்னையும் அவசர

பிரிவினில் சேர்க்கணும்

 

அதன்பின் அனைவரும்

என்னையே குறைசொல்லி

நம்மையும் பிரித்திட

முயற்சியும் செய்குவார்

 

பிரிவினைத் தாங்கிட

இருவர்க்கும் இயலாது

என்பதை நீயுமே

நான்குமே அறிந்ததால்

 

இப்போதைய தேவையை

மனதிலே கொண்டு

சட்டென நீயுமே

ஆறுதல் தந்திடு

 

குருகுலம், 8-2-2023, காலை 8.00

 

As I am sleeping in the same room where my mother lived and died, often I remember our life together.  Particularly the last few minutes in her life often comes before my eyes.  As I was taking care of her whole night, I used to take some rest in the afternoon.  So that day also after taking rest when I went and saw my mother, my sister who was sitting next to her told, ‘Amma’s oxygen level and pulls are often fluctuating in the oxygen meter.  She didn’t have anything from the morning.  So finally, you try to give her some milk.  I don’t know why that word ‘finally’ came from her.  Then I warmed some milk and gave three spoons.  She took all of them.  But suddenly the oxygen meter became block and my sister seeing that told, 'Amma passed away. She was only waiting for you to receive milk only from your hand finally.  Once you gave, she passed away’.  Though she told those words to comfort me, still that scene haunts me often as I have never witnessed death that much close in my entire life.  When my eldest brother and father passed away, I was not with them.  And I never have witnessed what death actually means in my life.  When I went to participate in the final rites for my father after three days, one of my neighbour lamented that I missed the opportunity to see the face of my father for the last time.  But I told him that I was happy that I didn’t see the face of my father after he passed away, as I will remember him alive.’  But as I witnessed death that much close, that too of my dear mother, though I was happy that she died peacefully in the very place where she wanted to die and also giving me an opportunity to serve her till the end of her life, still whenever I think about my mother, particularly the final few movements of her life, I cannot control my tears and started to cry. 

 

Fortunately, there is no neighbour and no one is staying with me. So, I can cry as much loudly I want.  Of course I know that this the part of life and no amount of my cry is going to bring her back.  At the same time, I am not crying deliberately and several times tears comes on its own without seeking my permission.  Then I thought that am I facing some psychological problem and loneliness in my life?  Do I need some counselling or medication to overcome this spontaneous emotional outburst.  But I am convinced that seeking the help of any psychologist won’t help in my situation as I never had much faith in it, at the same time knowing well that their need for others. I know well what they would say at the end which already I knew, of course not in any philosophical terms but explaining it using lots of their technical and medical terms.  But as a bhakta I have the greatest psychologist in my life.  So, after shedding tears, when I sat quietly for few seconds, then I told to the Lord, ‘unless you give your comfort I cannot get it from others.  You alone can heal me from within and help me to overcome such emotional outburst.’  But as I began to write the poem, I also warned Him that consider this request as an emergency and like so many other requests don’t postpone by saying that you know well when to give the answer.  If He fails then at the end, He will end up staying permanently with me unable attending others’ need but only to take care of me.  This might even end up Him being admitted in emergency ward as His decision not give the treatment immediately alone the cause for this.  And as I completed the poem with a sense of humour, I smiled and got up to do other works.


No comments: