Friday, December 9, 2022

 Bhakti Theology Song 1404


1404 Better you change

 

Why are you

Doing this unnecessary thing

Why you become

Upset with me

 

Even though I remain

Patience so far

Now you have to

Listen my voice

 

Where has gone

Your long patience

You forgot your

Love for me

 

My mind also became numb

As I receive beating regularly

Therefore your act now became

Very justifiable

 

Don’t think that

There is none

To plead

For my sake

 

There is no

Need for that to me

Better you don’t

Forgot this

 

When I share

My side reason

You should

Only listen that

 

There is no need

For others’ interference

None has to come

In between us

 

Whether we fight or reconcile

Let it be between us

If others know

About it

 

They might talk

Unnecessary gossip

And also rumours

Could spread rapidly

 

This struggle is

Not something new for us

And this is not going

To end with this

 

As usual you have

Your regular excuses

And I have also

Answer for that

 

Therefore not

Further delaying

Listen calmly

What I say

 

Better you change

The situation of

Me giving

Advice to you

 

We become like the twins

That born sticking together

There is no means

To be separate

 

If we both sit and talk

Some kinds of better solution

Might come

This is also true

 

Leaving this

If you remain very adamant

There is nothing

For me to tell any more

 

Gurukulam, 15-07-2022, 5.00 p.m.

 

Another tussle with the Lord.  Sometimes I enjoy dragging the lord for this kind of tussle as this is also part of the bhakti genre.###

1404 மாற்றியும் கொள்ளு

 

 

ஏனிந்த வீணான

காரியம் செய்கிறாய்

எதற்காக என்மீது

ஆத்திரம் கொள்கிறாய்

 

இதுவரை நானும்

பொறுமையாய் இருந்தாலும்

என்குரல் இனிநீ

கேட்டுத்தான் ஆகணும்

 

நீடித்த உன்பொறுமை

எங்குதான் போச்சு

நீகொண்ட நேசமும்

மறைந்துமே போச்சு

 

அடிவாங்ககி என்னுளம்

மறத்துமே போச்சு

ஆகவே உன்செயல்

நியாயமாய்ப் போச்சு

 

பரிந்துப் பேசிட

ஆள்இல்லை என்றுமே

நீயும் மனதிலே

எண்ணிட வேண்டாம்

 

அதற்கான அவசியம்

எனக்குமே இல்லை

அதையே நீயும்

மறந்திட வேண்டாம்

 

என்பக்க நியாயத்தை

நான் சொல்லும்போது

நீயும் அதையே

கேட்டுத்தான் ஆகணும்

 

வேறாரும் தலையீடு

செய்திட வேண்டாம்

பிறர்வந்து நம்மிடை

நுழைந்திட வேண்டாம்

 

அடித்தாலும் பிடித்தாலும்

நமக்குள்ளே இருக்கட்டும்

அக்கம் பக்கத்தில்

இதுவுமேத் தெரிந்தால்

 

வீணான புரளியும்

பேசிடக் கூடும்

வம்பும் தும்பும்

வளர்ந்திடக் கூடும்

 

இதுவொன்றும் புதிதான

சண்டையும் இல்லையே

இத்தோடு இதுமுடியப்

போவதும் இல்லையே

 

வழக்கமாய் நீ சொல்லும்

சாக்குமே இருக்கு

அதற்கான பதிலும்

என்னிடம் இருக்கு

 

ஆகவே வீணாக

தாமதம் செய்யாமல்

அமைதியாய் நான்

சொல்வதைக் கேளு

 

உனக்கே உபதேசம்

செய்கின்ற நிலமையை

நீயாக வந்து

மாற்றியும் கொள்ளு

 

ஒட்டிப் பிறந்த

இரட்டைபோல் ஆனோம்

வெட்டிப் பிரித்திட்ட

வழியேதும் இல்லை

 

இருவரும் அமர்ந்து

பேசிடும் போது

நல்ல தீர்வும்

வருவதும் உண்மை

 

அதனை விடுத்து

அடமும் பிடித்தால்

நான்சொல்ல இனிமேல்

ஏதுமே இல்லை

 

குருகுலம், 15-07-2022, மாலை 5.00


No comments: