Wednesday, December 7, 2022

 Bhakti Theology Song 1401


1401 Humanitarianism

 

Our heart will be full

When we live

By showing love

And grace to others

 

Seeking contention

And if we divide

Then life will

Become empty

 

God creating the world

And us,

Asked us to live

Together with love

 

But man dividing and

Destroying each other

Try to

Rule everyone

 

We should understand that

When we live

By sacrificing ourselves

We receive more

If we accumulate

More and more

We will lose too much

This also we should realize

 

Even after seeing

The harmony in nature

And the way they

Live together

 

It is a great tragedy

Only when human alone

Stand alone

By division

 

Human beings

Doing what both

God and nature

Never do

 

As destroy themselves

And nature

What we are going to gain

This is not clear

 

Therefore not

Allowing the

Humanitarianism

To be destroyed

 

Showing love

And remaining graceful

We should live

Together everyday

 

Gurukulam, 8-7-2022, 5.30 p.m.

 

The way  the war on Ukraine divided families, countries and even ideology at the cost of humanitarian needs is the greatest tragedy of this century.  Who is wrong and who is wrong is not the question which is affected and how to end such atrocity is the big question before humanity now.  In the past wars between two countries affected very limited people, but now it affects the entire humanity as we are living in a global village.  So the only remedy for this is to go back to the root of our life: showing love to live with others, allowing everyone to live.

1401 மனித நேயம்

 

அன்புமே காட்டி

அருளினைக் கூட்டி

அனுதினம் வாழ

மனதுமே நிறையும்

 

வம்பினைத் தேடி

பிரிவினை செய்ய

வாழ்வும் வெறுமை

ஆகியேப் போகும்

 

நம்மையும் படைத்து

அன்பால் இணைத்து

வாழ்ந்திடச் சொன்னான்

இறைவன் உலகில்

 

பிரித்துமே வைத்து

பிறரையும் அழித்து

ஆளுகை செய்திட

முயல்கிறான் மனிதன்

 

தன்னையேத் தந்து

வாழ்ந்திடும் போது

பெறுவது அதிகம்

புரிந்திட வேண்டும்

 

கையினைக் குறுக்கி

பொருளினைச் சேர்த்தால்

இழப்பது அதிகம்

உணர்ந்திட வேண்டும்

 

இறைவன் படைப்பில்

உள்ள அனைத்தும்

இசைந்து வாழும்

வாழ்வினைக் கண்டும்

 

மனிதன் மட்டும்

பிரிந்து கொண்டு

தனித்து நிற்பது

மாபெரும் துயரம்

 

இறைவன் இயற்கை

இரண்டும் செய்யா

செயலை ஏனோ

மனிதன் செய்து

 

இயற்கை யோடு

தன்னை அழிக்க

பெறுவது து

புரிய வில்லை

 

ஆகவே நாம்

மனித நேயம்

அழிந்து போக

இடம் தராமல்

 

அன்பைக் காட்டி

அருளைக் கூட்டி

அனுதினம் கூடி

வாழ வேண்டும்

 

குருகுலம், 8-7-2022, மாலை 5.30


No comments: