Bhakti Theology Song 1403
1403 Do your
part
Hands doing one thing
Eyes seeking another thing
Ears listening something
Mind thinking another thing
With this wavering mind
Which never remains stable
It is impossible for me to think only you
This I know very well
But even this Chanchal also
Helps one way
And I also
Realized this
It will help me
To understand your separation
I only
Means this
Whether I think you continuously
Or only for few seconds
There is no short coming in our relationship
I know that well
Wherever I go
This communication not disconnected
Is following me
This I realized
In this human life
Thousands of struggles
Are there
In every day
Remembering you
Amidst them
Indeed is great
I tell this for you to know
If you want me
To come without failure
At your feet
And sing your praises
Removing the Chanchal
Over lording my mind
Also make my organs
To remain under that control
Worshiping you
Without your share
It is not possible
For me
If you want
My bhakti for you
It is good for both of us
If you do this
Then the senses
Coordinating with mind
Will only worship you
You can witness this
Till that time
I will worship you
With this Chanchal mind
Better you understand this
Gurukulam, 14-07-2022, 5.15 p.m.
This is a common struggle for everyone who tries to
concentrate in their sadhana. This I have done and have seen in others' lives
too. Surprisingly, several people already wrote about this. The
following song by Pattinathar will endorse it. In film song Kannandasan wrote that, ‘Keeping one
eye here and another there is not proper way to worship God [in the temple, அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடில்லை]. As I
was reading Pattinattar’s song yesterday afternoon I wrote this song sharing my
own experience. But as usual I dragged the Lord also in this
struggle and demanded Him to do His part.
Hand doing one thing; eyes seeking one thing; mind
thinking some other thing, tongue telling a lie; the perishable body depending
another thing and as the ears long to listen another thing, how you are going
to accept my puja the one who removed all my karmas.—free translation by me,
Pattinattar, Janakkovai, Chennai, Sri Senbaka publishers, (2005) second
edition, 2010, song 4, Podu, page. 135.
1403 உன்பங்கைச் செய்
கையொன்று செய்ய
கண்னொன்றை நாட
காதொன்றைக் கேட்க
கருத்தொன்றை எண்ண
ஒருநிலை நில்லாது
அலைமோதும் மனதாலே
உன்னையே நினைப்பது
இயலாது அறிவேன்
ஆயினும் இந்த
சஞ்சலம் கூட
ஒருவிதம் உதவுது
நானதை உணர்ந்தேன்
உனது பிரிவின்
வலியை அதுவும்
புரிந்திட வைக்குது
அதைத்தான் சொன்னேன்
உன்னையே நினைத்தாலும்
சிலநொடி மறந்தாலும்
உறவில் எந்த
தொய்வில்லை அறிவேன்
எங்குமே சென்றாலும்
அந்த இணைப்பு
அறுந்து போகாது
தொடர்வதை உணர்ந்தேன்
பாடுள்ள மனித
வாழ்விலே நாளும்
வந்திடும் போராட்டம்
ஆயிரம் உண்டு
அதனிடை உன்னை
நினைப்பதே பெரிது
அதைநீ அறியவே
நானிதச் சொன்னேன்
எப்போதும் உன்னடி
வந்துநான் அமர்ந்து
தப்பாது உன்புகழ்
பாடணும் என்றால்
சஞ்சலம் நீக்கி
சிந்தையை ஆள்வாய்
அங்கமும் அதற்கு
அடங்கிடச் செய்வாய்
உன்பங்கு இல்லாமல்
உன்னைத் தொழுவது
என்பெலன் நம்பி
செய்திட இயலாது
என்பக்தி உனக்குத்
தேவையும் என்றால்
இதைநீ செய்வது
இருவர்க்கும் நல்லது
அதன்பின் அங்கங்கள்
சிந்த யோடிசைந்து
உன்னையே வணக்கும்
நீயதைப் பாரு
அதுவரை இதுபோல்
சஞ்சலம மனதோடு
நானுனைப் பணிவேன்
நீயுமே உணரு
குருகுலம், 14-07-2022, மாலை
5.15
கையொன்று செய்யவிழி யொன்றுநாடக்
கருத்தொன் றெண்ணப்
பொய்யொன்றுவஞ்சக
நாவொன்றுபேசப் புலால்கமழு
மெய்யொன்றுசாரச் செவியொன்றுகேட்க
விரும்புமியான்
செய்கின்ற பூசையெவ்வாறு
கொள்வாய் வினைதீர்த்தவனே—பட்டினத்தார், பொது, 4, ஞானக்கோவை என்கிற
சித்தர் பாடல்கள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, (2005), இரண்டாம்
பதிப்பு 2010, ப. 135
No comments:
Post a Comment