Monday, December 5, 2022

 Bhakti Theology Song 1399


1399 Renunciation and needs

 

Keeping so many

Needs in life

And praying each day

For them

 

In this life

In which I act

Which one to renounce

Better you tell that to me

 

As long as

There is the body

There is no lack of

Need in life

 

Seeking them

Though I toil very much

Still all the

Needs are not fulfilled

 

Like a fool

Who tries to put down fire

By pouring

More oil on it

 

Once I began

To search for more

The need also will

Increase many fold

 

Fearing that

If I take

Any decision

To renounce

 

The very renunciation

Itself becoming a burden

Will further increase

Suffering in life

 

Accepting the

Needs in life

Understanding

Renunciation properly

 

Trying to keep

A balance between them

If one tries live accordingly

The life will go smoothly

 

Clinging one

If we give up another

The very life

Will be doomed

 

Gurukulam, 7-7-2022, 8.30 p.m/

 

Renouncing is an art. Anything thrown away from life out of frustration will come back several fold to control us.  So realizing the legitimate material needs of the body [and life] accepting its demand with proper understanding about renunciation alone brings balance in life allowing us to lead a calm and sober life.

 

1399 தேவையும் துறவும்

 

தேவைகள் ஆயிரம்

வைத்துக் கொண்டு

தினமும் அதற்காய்

வேண்டிக் கொண்டு

 

நாளும் நாடகம்

ஆடிடும் வாழ்வில்

நானெதைத் துறக்க

நீயுமே சொல்லு

 

தேகம் ஒன்று

உள்ள வரையில்

தேவைக் எந்த

குறைவும் இல்லை

 

அதனைத் தேடி

நாளும் ஓடி

உழைத்த போதும்

நிறைய வில்லை

 

எண்ணை ஊற்றி

நெருப்பை அணைக்க

முயற்சி செய்யும்

மூடனைப் போல்

 

தேவைக்காக

தேடி அலைய

தேவை மேலும்

பெருகி நிற்கும்

 

அதனைக் கண்டு

பயந்து நின்று

துறக்க மனதில்

எண்ணம் கொண்டால்

 

துறவே பெரிய

பாரம் ஆகி

மேலும் துயரை

வளர்த்து வைக்கும்

 

தேவை தன்னை

ஏற்றுக் கொண்டு

துறவு தன்னை

புரிந்து கொண்டு

 

இரண்டின் இடையே

சமனும் செய்து

வாழ முயன்றால்

வாழ்வு நடக்கும்

 

ஒன்றைப் பற்றி

ஒன்றை விட்டால்

வாழ்வு முழுதும்

நாசம் ஆகும்

 

குருகுலம், 7-7-2022, இரவு 8.30


No comments: