Bhakti Theology Song 1395
1395 it is in your hand
You alone should
Watch the situation
Then you should come
And do seva to me
If you forgot to
Keep this in mind
I alone have to
Remind you again
But you also have
Some responsibility
I also know
That very well
And you also know
That in that your responsibility
Lay all
My needs
Don’t have indifference
Thinking that
I am only
A slave to you
Don’t forget that
Even as a slave
I also have
My own rights
Don’t show
Indifference towards me
Thinking that
I am only your bhakta
When you are
Bestowing benefits
Not discriminating
Between the good and bad people
In whichever division
I might be
The help will come
Automatically to me
Keeping this
Your own law
And keeping my needs
In your mind
Cooperating with
My situation well
You should come
And help me
Leaving that
If you go
To take care
Of this world
That very world
Will blame you
And will also
Question you more
When you are
Struggling without
Having time
To carry so many responsibilities
Do you have
Time to answer them
And do you want to
Accept the blame also
I won’t tell
More than this
My life is
In your hand
I tried my best
To communicate to you
Now taking the final decision
Is in your hand
7-7-2022, Gurukulam, 8.00 a.m.
God has equal responsibility to take care of His bhakta, though
each bhakta knows her responsibilities in life. Anyhow God is going to show His
mercy both on good and evil and in whichever category He puts me, considering
my status as His bhakta, at least He should pay equal attention to her as He
has concern about the wider world.
1395 உனது கையில்
நிலமையை நீதான்
பார்த்திட வேண்டும்
அதன்பின் சேவை
செய்திட வேண்டும்
நினைவு வைத்திட்ட
நீயும் மறந்தால்
நான்தான் உனக்கு
சொல்லிட வேண்டும்
ஆயினும் உண்டு
பொறுப்பு உனக்கு
அதுவும் நன்கு
தெரியும் எனக்கு
அந்தப் பொறுப்பில்
எனது தேவை
அடங்கி இருப்பது
புரியும் உனக்கு
அடிமை தானே
என்று எண்ணி
அலட்சியம் நீ
கொள்ள வேண்டாம்
அடிமை எனக்கும்
உள்ளது உரிமை
அதை நீயும்
மறக்க வேண்டாம்
நமது பக்தன்
என்று எண்ணி
பாரா முகமாய்
இருக்க வேண்டாம்
நல்லோர் தீயோர்
என்ற பேதம்
இன்றி நீயும்
உதவும் போது
எந்தப்பிரிவில் நான்
இருந்த போதும்
தன்போல் உதவி
வந்து சேரும்
இந்த நியதியை
எண்ணிக் கொண்டு
எனது தேவையை
மனதில் கொண்டு
நிலமை தன்னை
நன்கு அனுசரித்து
நீயும் வந்து
உதவ வேண்டும்
அதனை விடுத்து
என்னை மறந்து
உலகை நீயும்
தாங்கப் போனால்
அந்த உலகே
உன்னைப் பழிக்கும்
அத்துடன் பல
கேள்விகள் கேட்கும்
பொறுப்பை சுமக்க
நேரம் இன்றி
நீயும் தவித்து
இருக்கும் போது
பதிலும் சொல்ல
நேரம் இருக்கா
பழியைச் சுமக்க
விருப்பம் இருக்கா
இதற்கு மேலும்
சொல்ல மாட்டேன்
எனது வாழ்வும்
உனது கையில்
முடிந்த வரையில்
சொல்லி விட்டேன்
முடிவு இனிமே
’உனது கையில்
7-7-2022,
குருகுலம், காலை 8.00
No comments:
Post a Comment