Sunday, December 4, 2022

 Bhakti Theology Song 1396


1396 I will live in you

 

One way

This is good

And this also

Is your grace

 

Slowly the world

Should disappear for me

And one day it should

Disappear completely to me

 

It will try to

Entice to keep us

Within it and it will do

All kinds of efforts for that

 

It will try to make us to stumble

And make us to believe

How many good things

Are there for us

 

Many things that

Appear as good

Need not be

Good for sure

 

Many things

That we do as useful

Won’t be

That much useful

 

Nothing will come

From you that

Will separate

You and me

 

You made me

To live in this world

By providing everything

For me to live

 

But when I sought

More and more

Longing for the desires of heart

You left and went away

 

Separated from you

And losing your relationship

All that I get

Become a snare

 

Trapped in that net

And unable

To find any

Means to escape from it

 

When I began to cry

Looking unto you

Coming quickly

Redeeming me

 

Showing the

True nature of the world

You bestowed your grace

For me to live in you

 

Abiding in that

Your grace

I will live in you

By renouncing the world

 

Gurukulam, 7-7-2022, 10.45 p.m.

 

Though we are not away from the world, to be in the Lord, one way we have to keep away from the world that tries to entice us to trap in it.  But a bhakta has the presence and grace of God to safeguard us from that enticement and help us to abide in Him.

 

1396 உன்னில் வாழ்வேன்

 

இதுவும் ஒருவிதம்

நல்லது என்பேன்

இதுவும் உனது

அருள்தான் என்றேன்

 

மெல்ல மெல்ல

மறந்திட வேண்டும்

உலகம் ஒருநாள்

மறைந்திட வேண்டும்

 

தன் வசமாக்கி

நம்மையும் வைக்க

தந்திரம் பலவும்

உலகும் செய்யும்

 

நல்லவை எத்தனை

உண்டெனச் சொல்லி

நம்ப வைத்து

நமையும் கவிழ்க்கும்

 

நல்ல வையாக

தோன்றிடும் பலவும்

நன்மையாக நிச்சயம்

இருப்பதும் இல்லை

 

பயனுண்டு இதிலே

என்றுமே எண்ணி

செய்திடும் பலவற்றில்

பயனெதும் இல்லை

 

உன்னையும் என்னையும்

பிரித்திடும் எதுவும்

உன்னிடமிருந்து என்றும்

வருவதும் இல்லை

 

உடலின் தேவைக்கு

உரியன தந்து

உலகினில் வாழ

வழிவகை செய்தாய்

 

ஆயினும் மனதின்

ஆசைக்கு இணங்கி

அதிகம் நாட

என்னையும் பிரிந்தாய்

 

உன்னைப் பிரிந்து

உறவை இழந்து

அடைந்த பலவும்

இடும்பாய் மாற

 

அந்த வலையில்

சிக்கிக் கொண்டு

மீண்டு வந்திட

வழியும் இன்றி

 

உன்னை நோக்கி

கதறி அழைக்க

விரைந்து வந்து

என்னை மீட்டு

 

உலகின் உண்மை

தன்மையைக் காட்டி

உன்னில் வாழ

அருளும் தந்தாய்

 

அந்த அருளில்

நிலைத்து நின்று

உலகைத் துறந்து

உன்னில் வாழ்வேன்

 

குருகுலம், 7-7-2022, இரவு 10.45


No comments: