Bhakti Theology Song 1398
1398 Put in writing
To whom shall
I share
And to whom shall
I ask
How I am
Going to communicate
My thoughts
That are not even clear to me
All that I shared so far
Is very less
And what I never shared
Is plenty
There is no
Shortage for words
And there is no limitation
For me to write
However they
Don’t have the power
To make my thought
Complete one
Therefore putting
A limit to my words
And keeping a
Fence to my writings
Talking with you
In silence
I poured down my thoughts
To you
Then I received
The clarity
How I am going to
Utter it
But there is no need
For that to me share
And others have no
Time to listen
But I have written them
Only for my sake
And I told you
The reason for that
Once I
Shared all
My inner thoughts
With you
And put them
In writing
And after
Presenting them to you
As the wavering thoughts
Become calm
Then your words will
Fall in my ears
As I obey to it
And act accordingly
Peace will come
Each day to me
Gurukulam, 7-7-2022, 6.00, p. m.
The one reason why I write poems and other brainstorms is that
unless I put them in words, my thoughts will continue to ponder over the
subject and never allow me to keep quiet or to talk even with the Lord. So in
order to tame my own mind I have to write my thoughts, whether others read it
or not. As I often say I write to my own needs and post in the blog not
expecting others to read or respond. Once I
put my thoughts in writing my mind allows me to do other activities. Whether
this is some kind of mental sickness or a common experience to few others.
1398 எழுதி வைத்தேன்
யாரிடம் சென்று
நான் சொல்வேன்
எவரிடம் சென்று
நான் கேட்பேன்
எனக்கே புரியாத
எண்ணம் அதனை
எப்படி பிறர்க்கு
எடுத் துரைப்பேன்
இதுவரை சொன்னது
அணைத்துமே கொஞ்சம்
சொல்லாமல் விட்டது
ஏராளம் ஏராளம்
சொல்லிடச்
சொல்லுக்குப்
பஞ்சமே இல்லை
எழுதிட வார்த்தைக்கு
அளவுமே இல்லை
ஆயினும் எண்ணத்தை
முழுமை ஆக்க
அவற்றுக்கு ஏனோ
வலிமை இல்லை
ஆகவே சொல்லுக்கு
எல்லை வைத்து
எழுத்துக்குகச்
சற்று
வேலி இட்டு
மவுனமாய் நானும்
உன்னுடன் பேசி
மனதின் எண்ணத்தை
ஊற்றி விட்டேன்
அதன்பின் அடைந்தேன்
தெளிவும் நான்
ஆஹா அதனை
என்ன சொல்வேன்
அதற்கான தேவை
எனக்கு இல்லை
அதைக்கேட்க நேரம்
பிறர்க்கு இல்லை
ஆயினும் எனக்காக
எழுதி வைத்தேன்
அதற்கான காரணம்
சொல்லி விட்டேன்
உள்ளாக தோன்றும்
எண்ணத்தை நானும்
உன்னிடம் வந்து
சொன்ன பின்பு
எழுத்தாக்கி அதனை
ஏட்டிலே வடித்து
உன்முன்பு நானும்
வைத்த பின்பு
அலைமோதும் எண்ணம்
அமைதியாய் அடங்க
அதன்பின்
உன்வார்த்தை
காதில் வீழும்
நானுமே பணிந்து
அதன்படி நடக்க
நாள்தோறும் அமைதி
வந்து சேரும்
குருகுலம், 7-7-2022, மாலை 6.00
No comments:
Post a Comment