Tuesday, December 6, 2022

 Bhakti Theology Song 1400


Though written back in July, this remains relevant for the present situation.

 

1400 Do proper justice

 

Your justice remains

Very correct to you

But justice for me alone

Remains in contention

 

Ok, let it be

What else can one do

There are difficulties

To remain as God

 

You should first see

The common justice for all

Then you should do

What I am asking

 

If any contradiction

Comes in this

Who should

Relent first

 

Though the common justice

Remains always common for everyone

There is no justice

That never get changed

 

So many times

You relented

And I never

Forgot it

 

When I ask you

To do the same one more time

It is not proper on your part

To remain adamant

 

Is this any dispute

With other so that

I should

Relent a bit

 

Is this any easy litigation

To clear easily for those

Who cannot understand

The legality of the dispute

 

Once it become clear that

Justice is yours

Argument is also yours

Judgement is also yours

 

What is the use of

All my counter arguments

Final closing argument

Also belongs to you

 

The judgment that

Will come after that also yours

It is better for you to

Keep this in your mind

 

I can put

My arguments

Only outside

The court

 

Only if we negotiate

And reach some compromise

That will remain

Favourable to me

 

Leaving that if you

Make me to contend in the court

Your judgment will

Turn against me

 

Then only your justice

Remaining very correct

Only my justice will remain

As a permanent litigation

 

Is this dispute

Necessary for us

Realizing this

Do justice for me

 

Gurukulam, 8-7-2022, 5.00 p.m

Like every family member, particularly parents and children always think that proper justice is never done to them by the parents or children. The same is with a bhakta.  She will always think that God is showing partiality only with her. Whereas he is always giving His blessings to others only to put her in trials either as part of His divine lila or in the name of testing her. So I am also not an exception and He is doing the same only with me.

 

1400 சரியான நியாயம்

 

உனக்கான நியாயம்

சரியாக உள்ளது

எனக்கான நியாயம்

பிணக்கிலே உள்ளது

 

சரிவிடு போகட்டும்

இனியென்ன செய்வது

கடவுளாய் இருப்பதில்

கஷ்டமும் உள்ளது

 

பொதுவான நீதியை

முதலிலே பார்க்கணும்

அதன்பின் நான்

கேட்டதைச் செய்யணும்

 

இதிலே முரண்பாடு

ஏதேனும் வந்தால்

யாரிங்கு முதலிலே

விட்டுக் கொடுக்கணும்

 

பொதுவான நீதி

பொதுவான போதும்

மாறாத நீதியென

ஒன்றுமே இல்லை

 

எத்தனையோ முறை

விட்டுக் கொடுத்து

நீயுமே சென்றாய்

நானதை மறக்கலை

 

மீண்டும் ஒருமுறை

செய்திடு என்றால்

முரண்டு பிடிப்பது

மட்டுமே சரியில்லை

 

விட்டுக் கொடுத்து

நானுமே போக

இதுவென பிறருடன்

நான்கொண்ட பிணக்கா

 

புரியாத மனிதர்க்குப்

புரியவே சொல்லி

தீர்த்து வைக்கின்ற

எளிதான வழக்கா

 

நீதியும் உனது

வாதமும் உனது

தீர்ப்பும் உனது

என்றான பினே

 

எதிர்வாதம் எத்தனை

நானுமே வைத்தாலும்

இறுதி வாதமும்

உனதாக்கிப் போனது

 

அதன்பின் வந்திடும்

தீர்ப்பும் உனது

அதைநீ மனதில்

கொள்வது நல்லது

 

வழக்காடு மன்றத்தின்

வெளியே மட்டும்

வாதங்கள் என்னால்

வைத்திட்ட முடியும்

 

அங்கே பேசி

சமரசம் ஆனால்

அதுமட்டும் எனக்கு

சாதகம் ஆகும்

 

அதனை விடுத்து

வழக்காட வைத்து

நீசொல்லும் தீர்ப்பு

எதிராகப் போயிடும்

 

அதன்பின் உன்நியாயம்

சரியாக இருக்க

என்நியாயம் மட்டும்

பிணக்கிலே இருக்கும்

 

இந்த பிணக்குத்

தேவையா நமக்கு

உணர்ந்து செய்திடு

நியாயம் எனக்கு

 

குருகுலம், 8-7-2022, மாலை 5.00

Posted up to this @@@

No comments: