Friday, January 27, 2023

 Bhakti Theology Song 1408


1408 Some longing

 

How much you might have

Done for me

My heart is longing

Expecting something more

 

This is not at all

Happening anew

I don’t know

The reason for this

 

This is not happening

To any other living being

In your

Creation

 

Even if that

Has happened

We don’t have

Any understanding about it

 

But somehow

This human life

Became a

Great trouble

 

And who is the

Reason for this

You or me

I cannot understand

 

How many question

Were asked

And however we

Lament about it

 

No one on this earth

Has ever received

A proper

Answer for this

 

At the same time

This question and

Lamentation is

Not going to end

 

There is no other

Alternative to this

Other than

Lamenting about it

 

Somehow thinking

About our right

To do

This

 

As I unload my

Heart burden to you

My longing will go

Once I think about you

 

Gurukulam, 23—07-2022, 11.30 p.m.

Human life indeed is a painful one, however glorious might be our creation.  Though philosophy and theology tried their best to provide various kinds of answers, still I am not convinced that anyone received a convincing and final answer for this.  But the only consolation for a bhakta of the Lord is that we can pour down our heart to Him and go ahead in life in spite of the trials in life.

 

1408 ஏதோ ஒரு ஏக்கம்

 

எத்தனை நீயும்

செய்த போதிலும்

எதையோ எண்ணி

என்மனம் ஏங்குது

 

இதுவும் புதிதாய்

நடந்திட வில்லை

இதற்கான காரணம்

தெரியவும் இல்லை

 

உனது படைப்பில்

உள்ள உயிரினம்

எதற்கும் இதுபோல

நடப்பது இல்லை

 

அப்டியே அது

நடந்திருந்தாலும்

அதுபற்றி எமக்குப்

புரிதலும் இல்லை

 

ஆயினும் இந்த

மானிட வாழ்வு

ஆனது ஏனோ

மாபெரும் தொல்லை

 

ஆயினும் அதற்கு

காரணம் நீயா

நானா என்று

விளங்கவும் இல்லை

 

எத்தனை கேள்விகள்

கேட்ட போதிலும்

எப்படிப் புலம்பி

கதறிய போதிலும்

 

தக்க விடையை

தரணியில் இதுவரை

பெற்றவர் என்று

ஒருவரும் இல்லை

 

ஆயினும் இந்த

கேள்வியும் புலம்புலும்

என்றும் ஓய்ந்திடப்

போவதும் இல்லை

 

அழுது புலம்பித்

தீர்ப்பது அன்றி

வேறு இதற்கு

மாற்றும் இல்லை

 

என்னவோ இதனைச்

செய்திட எமக்கு

உள்ள உரிமை

தன்னையே எண்ணி

 

இதயத்தின் பாரத்தை

உன்னிடம் இறக்க

ஏக்கம் போகும்

நானுனை நினைக்க

 

குருகுலம், 23—07-2022, இரவு 11.30


No comments: