Saturday, October 29, 2022

 Bhakti Theology Song 1344


1344 Should flee

 

Like the animal

Which roles back

In the mud

After bathed

 

Like the bird

Which get trapped

In the net

From which it escaped

 

Is there any fool

In this world

Who loses mukti

After receiving it

 

Shall one long

The unwanted life

Which she

Give up

 

Once bitten by it

Losing one’s mind

Shall one again

Long for it

 

When unnecessary thoughts

And actions

Seek after us

Once again

 

Can one chew them

Again and again

Thinking that

One is fighting against them?

 

Don’t become

Like a dog

Which licks

Its own vomit

 

Don’t live

Like a fool

Who step again

On the excretion  

 

When the

Time comes to flee

We should run away

Fleeing from it

 

If we seek

Unnecessary confrontation

Then we will end up

Paying heavy price for that

 

There is no profit

Opposing it

With false courage

Once again

 

One hides

When it is necessary

Then alone she can

Attack again

 

Understanding this clearly

And thinking properly

One should guard

The mukti that she received

 

Gurukulam, 13-02-2022, 10.30 p.m.

 

In Today’s portion of reading in Uttaraveda [NT] I read the verses from 2:22 Peter

 

After reading the same words, particularly about the dog licking its own vomit came to my mind.  How true is this noble advice for everyone to follow. Though we need to fight against several unwanted things in our life, when it comes to temptation and unnecessary thoughts it is better to flee from them than to confront them in the name of opposing them with vain courage.  As this thought impressed  me I wrote this song as my reflection.

 

1344 ஓட வேண்டும்

 

கழுவிய பின்னே

மீண்டும் சென்று

சேற்றில் புரளும்

மிருகம் போல

 

தப்பி வந்த

வலையின் உள்ளே

மீண்டும் சிக்கிய

பறவைப் போல

 

முக்தியைப் பெற்று

அதனை இழக்கும்

மூடரைப் போல

உலகில் உண்டோ

 

விட்டு வந்த

விரும்பா வாழ்வை

மீண்டும் எண்ணி

ஏங்கிடலாமோ

 

பட்ட பின்னும்

புத்தி யற்று

மீண்டும் அதனை

நாடிடலாமோ

 

வேண்டா எண்ணம்

விரும்பா செய்கை

நாடி மீண்டும்

தேடி வந்தால்

 

எதிர்ப்பதாக

எண்ணிக் கொண்டு

மீண்டும் அசை

போடலாமோ

 

எடுத்த வாந்தி

தன்னை மீண்டும்

நக்கும் நாயாய்

மாறிட வேண்டாம்

 

மிதித்த கழிவை

மீண்டும் மிதிக்கும்

மூடராய் எவரும்

வாழ வேண்டாம்

 

விலகிச் செல்லும்

நேரம் வந்தால்

விலகிச் சென்று

ஓடிட வேண்டும்

 

வேண்டா வம்பை

நாடிச் சென்றால்

அதிக விலையும்

தரவும் வேண்டும்

 

அசட்டுத் துணிவு

கொண்டு மீண்டும்

எதிர்ப்பதாலே

இலாபம் இல்லை

 

பதுங்கும் போது

பதுங்கினால்தான்

பாயும் போது

தாக்க முடியும்

 

இதனை உணர்ந்து

ஆய்ந்து நன்கு

முக்தி தன்னைக்

காக்க வேண்டும்

 

குருகுலம், 13-02-2022, இரவு 10.30


No comments: