1466 t0 1470
1466 Relationship continues
I don’t know
To talk philosophy
I refused to follow
All the traditional [ritual] codes
I understood the only
One philosophy on this earth
That relationship
Alone is True
Born with relationship
And living with relationship
When it continues
Even after our death
Not realizing that
And living accordingly
What is the use of
Talking philosophy
[and following all
Ritual codes]
I came as your child
As you remain my mother
I know well that
You brought up me with tender care
Accepting so many
Troubles for me
You lived [only] for me
That I experienced
Thinking that
Enough you have done [for me]
Did you leave now
Leaving me alone
Though separation
Is common to all
Why you left me
Giving that also to me
Though my buddhi understands it
My heart refuses to accept it
And my buddhi does not like
The way my heart cries
But I didn’t yet receive
The maturity
To accept the vacuum
That you gave to me
But you will ever
Remain as my mother
You will comfort me
Allowing to mourn as long as I could
Though your moral body has gone
Our relationship will continue
This philosophy alone
You shared with me
I don’t know for sure
That when and where
And how I will
Meet you again
But you are living
In my heart
And seeing you there
I will live each day
Gurukulam, 28-12-2022, 6.30 p.m.
I started crying ever since my mother was bedridden. When she passed away peacefully on 26th
evening, I couldn’t control my tears. All those around me bombarded me with the
one philosophy ‘Everyone had to die.
This is part of nature. You know
this better than us. But you never
stopped crying. First stop it. Otherwise, your health will be affected’.
My only response to them was: What my buddhi [intellect]
understands my heart refuses to accept and what my heart does my buddhi never
approves’. But mourning is part of human nature. Indeed, it is also a gift by God. Of course, I know that one day we all will be
gone. At the same time, I always
insisted that, though our physical body is gone the relationship that we have
or we had will continue forever. When we
came to the world, we never came as an individual but in relationship with so
many others—as a daughter, son, grandchild, niece, nephew, cousin. After we
passed away the same relationship will continue. Otherwise, there is no point in having human history
and tradition. No saynnasi is exempted
from this common rule. Pattinattar who renounced everything lamented and wrote
a long song of lamentation when his mother passed away. Even Adi Sankara performed funeral rites to
his mother. So many sannyasis kept their
mother with them in the ashram. So what
I am doing—mourning for my mother is part of human nature. And the only philosophy that I learnt in life
is that respect and celebrate relationship—even as a Guru and disciple.
After the funeral and bones were collected and immersed in
water, everyone left. Some of my
relatives and close friends concerned about leaving me alone knowing well that
I will continue to cry remembering my mother.
But very few agreed with me ‘not hold back your tears and mourn unless
your heart also accepts the reality of death’.
So after my evening walk when I returned back unable to
control my tears as I was crying I wrote this song dedicating to my beloved
mother. I would prefer to stay alone
here not disturbed by others to calm down my mind and atman to accept the
philosophy that those who are gone won’t come, but our relationship with them
will continue forever especially with one’s mother.
1466 உறவு தொடரும்
தத்துவம் எதுவும்
பேசிட அறியேன்
சாத்திரம் பலவும்
பார்த்திட மறுத்தேன்
இத்தரை வாழ்வில்
உறவொன்றே உண்மை
என்கிற தத்துவம்
நன்குமே அறிந்தேன்
உறவோடு பிறந்து
உறவுடன் வாழ்ந்து
மரித்தும் உறவாக
தொடர்ந்திடும் போது
அதனை உணர்ந்து
அதன்படி வாழாமல்
தத்துவம் பேசி
பயனுமே என்ன
[சாத்திரம் பார்த்து
அடைவதும் என்ன]
தாயான உனக்கு
சேயாக வந்தேன்
தாலாட்டி சீராட்டி
வளர்த்ததை அறிவேன்
எனக்காக துன்பங்கள்
பலவுமே ஏற்று
எனக்காக வாழ்ந்தாய்
நானதை உணர்ந்தேன்
இதுவரை செய்தது
போதுமென் றெண்ணி
என்னை தனியாக்கி
நீவிட்டு சென்றாயோ
பிரிவென்ற ஒன்று
பொதுவான போதும்
எனக்கதைத் தந்து
ஏன்நீ சென்றாயோ
அறிவுக்குப் புரிந்தாலும்
மனமதை ஏற்கலை
மனமது அழுவதை
அறிவுமே விரும்பலை
ஆயினும் நீதந்த
வெறுமை மட்டும்
ஏற்றிடும் பக்குவம்
இன்னும் வரவில்லை
ஆயினும் தாயாக
என்றுமே இருப்பாய்
அழம்வரை அழவிட்டு
ஆறுதல் தருவாய்
உன்னுடல் போனாலும்
உறவு தொடரும்
என்கிற தத்துவம்
எனக்குச் சொன்னாய்
இனிஉன்னை எங்கு
எப்படிக் காண்பேன்
என்பது எனக்கு
நிச்சயம் தெரியாது
ஆயினும் என்மனம்
அதனுள் இருக்கிறாய்
அங்குனைக் கண்டு
அனுதினம் வாழ்வேன்
குருகுலம், 28-12-2022, மாலை 6.30
1467 crying will change the heart
However, I lament
My mother won’t come back
Though I understand
This truth very well
Still, you know that
Only if I cry like this
Then alone me
Heart will find peace
When you have
Shed tears, though remaining as God
You also allowed
The same for me
Though some kind of
Emptiness has come within me
You helped me to understand that
This is also natural
When even animals
Are crying when separated
It is good for me
To cry
Though my mother has gone
Oh Lord you are there
And you will give comfort me
Encouraging me everyday
Though I might forget her
Slowly in life
Becoming a mother
You will show her love
However, rest of life
Might move
How and wherever
You will keep me
Your eyes that have
Seen me even before
I was formed in the womb
Will never leave me for a second
Once you become
As a father and mother
You will remain with me
As an eternal relative now knowing separation
Creating me
In the womb of my mother
You bestowed the relationship as
A mother and child
Though she is separated in body
She continues to live in her relationship with me
It is enough for me
To every day
Along with it
As your grace is therefore me
I will live each day
Praising you.
Gurukulam, 30-12-2022, 5.30
After went for evening walk after long time, when I returned
to my room unable to control my tears I began to cry for my mothers. Of course, I know well that she will never
come back but as her memory and particularly the last few weeks of our struggle
together to take care of her will always remain fresh in my mind and will bring
tears. When I am translating and typing this narrative on January 3rd
early morning, I cannot control my tears and with much tears I am typing
this. God knows my heart and He is there
to console me and allowing me to cry if I need to do. What others think is not
important for me.
1467 அழுதால் மனமாறும்
எப்படி அழுதாலும்
ஆத்தாள் வரமாட்டாள்
என்கிற உண்மை
எனக்குப் புரிந்தாலும்
இப்படி அழுதால்தான்
என்மனம் ஆறும்
என்பது மட்டும்
உனக்குப் புரியும்
கடவுள் நீயே
கண்ணீர் விடும்போது
அதையே நான்செய்ய
நீயும் அனுமதித்தாய்
ஒருவித வெறுமை
உள்ளத்தில் வந்தாலும்
இதுவும் இயற்கை
என்பதை புரியவைத்தாய்
மிருகங்கள் கூட
பிரிவுக்காய் அழும்போது
நானும் அழுவதே
நல்லது எனக்கு
ஆத்தாள் போனாலும்
ஐயனே நீயுள்ளாய்
அனுதினம் எனைத்தேற்றி
ஆறுதல் அளிப்பாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
அவளை மறந்தாலும்
தாயாக நீமாறி
அவளன்பைக் காட்டுவாய்
எஞ்சிய என்வாழ்வு
எப்படி நகர்ந்தாலும்
எங்கே எப்படி
என்னைநீ வைத்தாலும்
கருத்தோன்றும் முன்பாக
கண்ட உன்விழிகள்
கணநேரம் அகலாது
வைத்தென்னைக் காப்பாய்
அன்னையாய்த் தந்தையாய்
அனைத்துமாய் ஆனபின்
பிரியாத உறவாகி
என்னோடு இருப்பாய்
என்அன்னை கருவில்
என்னை உருவாக்கி
தாய்சேய் உறவினை
நீயுமேத் தந்தாய்
உடலாலே பிரிந்தாலும்
உறவாக வாழ்கிறாள்
அதுபோதும் எனக்கு
அனுதினம் வாழ
அத்துடன் உன்னருள்
அகலாது இருக்க
நித்தமும் வாழ்வேன்
நானுனைத் துதித்து
குருகுலம், 30-12-2022, மாலை 5.30
1468 ஆறுதல் தருகிறாய்
தூக்கிச்
சுமக்கிறாய்
தெரிந்தே இருக்கு
பார்த்து
நடத்துறாய்
புரிந்தும்
இருக்கு
ஆயினும் மனதுள்
துயரம் இருக்கு
அதுவும் உனக்குப்
புரிந்தும்
இருக்கு
தாயை இழந்து
தவிக்கும் போது
சேய்க்கு ஆறுதல்
தருவது யாரு
அந்த இடத்தை
நிரப்பும் தகுதி
மனிதர் எவருக்கு
உண்டு கூறு
இந்த இழப்பை
ஈடு செய்ய
இகத்தில் எனக்கு
எவரும் இல்லை
ஆனால் உனது
மடியும் இருக்கு
அதிலே சாய
இடமும் இருக்கு
அன்னை போலவே
தலையும் கோதி
ஆறுதல் தருகிறாய்
அனுதினம் எனக்கு
சொல்ல வார்த்தை
ஏதும் இன்றி
சொல்லிடத் தேவை
எனக்கும் இன்றி
உன்மடி சாய்ந்து
தவிக்கும் என்னை
அள்ளி எடுத்து
அணைத்தாய் நீயும்
அந்த அணைப்பு
தந்திடும் ஆறுதல்
செஞ்சை வருடி
தந்திடும் போது
கண்களை மூடி
தோளில் சாய்ந்து
காலம் முழுதும்
உறங்கிட வேண்டும்
கண்ணிர் சிந்தி
கதறிடும் போது
உன்னிரு கரங்கள்
துடைத்திட வேண்டும்
மெல்ல மெல்ல
தேறுதல் தந்து
இழப்பின் வலியைத்
தாக்கிட வைத்து
தூக்கிச் சுமந்து
தாங்கிட வேண்டும்
துயரை நீக்கி
காத்திட வேண்டும்
2-1-2023, குருகுலம், இரவு 7.30 p.m.
1469 உன்னிலே கண்டு
காலம் மறந்திடும்
என்று சொனாலும்
உன்காவல் இருக்கு
என்றுமேப் புரிந்தாலும்
தாயின் நினைவு
அகலாது என்றும்
ஒருசேய் மட்டுமே
புரிந்திடும் இதையும்
அன்னைபோல் உறவு
அவனியில் இல்லை
அவளின் அன்பை
மறக்க முடியலை
உறவென்ற சொல்லும்
பொதுவான போதும்
அவளின் உறவுக்கு
விளக்கமே இல்லை
கண்ணில் காணாத
தெய்வத்தைக் காட்டும்
கடவுளாய் நம்முன்
அவளும் இருப்பாள்
உடல் பிரிந்தாலும்
உறவு தொடர்வதால்
தெய்வத்தை அவளே
தொடர்ந்து காட்டுவாள்
உன்னைத் தொட்டு
உணராத போதும்
அவளின் அணைப்பில்
உன்னை உணர்ந்தேன்
அந்த உணர்வு
என்றுமே இருக்கும்
அதிலே உனது
காட்சியும் கிடைக்கும்
இந்த பேற்றினை
இதுவரைத் தந்தாய்
இந்த உணர்வு
தொடர்ந்திட வைப்பாய்
ஒருநாள் எனது
உடலும் மறைந்து
உன்னோடு வந்து
சேர்ந்திடும் போது
நிரந்தரமாக இருந்திடும்
நீங்காகத உணர்வு
உன்னுடன் கலக்க
எனக்கும் கிடைக்கும்
அதுவரை இந்த
பாடுள்ள உலகில்
அன்னையை நினைந்து
உன்னையே சார்ந்து
தாயின் அன்பை
உன்னிலே கண்டு
உன்னிலே தாயை
உணர்ந்திட வேண்டும்
குருகுலம், 3-1-2023, காலை, 6.00 am
1470 அன்னையாய் இருப்பாய்
தாயோடு சேர்ந்து
போக வேண்டும்
என்றே உன்னை
நானும் வேண்டினேன்
அவள் போனபின்
என்னை வைத்து
நீயென்ன செய்யப்
போகிறாய் சொல்லு
வேடிக்கை என்னை
வைத்து காட்டுவாய்
அதுஉன் வாடிக்கை
என்று சொல்லுவாய்
ஆகவேதான் நான்
இதனைக் கேட்கிறேன்
வாடிக்கையான உன்
பதில் தருவாயோ
அன்னைக்கு முன்னே
நீயும் போனாய்
ஆகவே உனக்கு
இது புரியாது
தெய்வமே ஆயினும்
தாயற்றுப் போனால்
உலகில் வாழ்வது
எவ்விதம் சொல்லு
ஒருசில அனுபவம்
உனக்குக் கிடைக்கலை
ஆகவே அவையும்
உனக்குப் புரியலை
தத்துவம் ஏதும்
இதில் உதவாது
ஆகவே நடைமுறை
பதிலைத் தந்திடு
உன்தாயை பிறரிடம்
தந்தது போல
என்னை எவரிடம்
தருவாய்க் கூறு
அவளுக்கு மாற்று
எவரும் இல்லை
நீயன்றி யாரும்
தேவையும் இல்லை
உறவு பந்தம்
இனியொன்றும் இல்லை
இருந்தாலும் என்மனம்
அதை நாடவில்லை
ஆகவே நானும்
போகின்ற வரையில்
அன்னையாய் நீயே
என்றும் இருப்பாய்
குருகுலம், 3-1-2022, காலை 11.00 am
No comments:
Post a Comment